பக்கம்:இல்லற நெறி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

இல்லற நெறி


46

அன்பார்ந்த செந்தில் வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

சென்ற கடிதத்தின் இறுதியில் திருமண வாழ்க்கையில் எழும் காரணங்களை மூன்று பகுதியில் தொகுத்துக் கூறி னேன் அல்லவா? அவற்றை ஈண்டுச் சற்று விரிவாக ஆராய் வேன்,

ஆளுமைக் கூறுகள் : முதலாவதாக ஆளுமைக் கூறுகள் திருமண வெற்றியில் எங்ங்ணம் பங்கு பெறுகின்றன என் பதை ஆராய்வேன். தம்பதிகளின் சால்பு: மீப்பண்பு 2 மனநிாை8, நடத்தைக் கோலங்கள், சிந்தனே, செயல் முதிர்ச்சிகள்-ஆகிய இவைகள் திருமண இணைவிற்கும் அல்லது திருமண முறிவிற்கும் மிக முக்கியமானவை என் பதை அறிவாயாக. திருமணப் பொருத்தங்களைப் பற்றிக் கூறிய இடத்தும் சிலரிடம் உள்ளக் கிளர்ச்சியளவில்பொருத் தம் ஏற்படுவதில்லை என்று குறிப்பிட்டது உனக்குநினைவிருக் கும் என்று கருதுகின்றேன். நரம்பு நோயுடைய 14 ஆளு மைக் கூறுகளைக் கொண்ட மக்களும், உள நோயினை யுடைய போக்குகளைக் கொண்டோரும் எந்தவிதமான மானிட உறவுகளிலும் பொருத்தப்பாடு அடைவதில் சங்கடப்படுவர். அன்ருட வாழ்க்கையில் மிக அன்னி

II. Frá Ly-Character 13. Bijl ico-Temperament 13. upswo-Disposition 14. நரம்பு நோயுடைய-Neurotic 15. a.org still-Psychopathy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/542&oldid=1285340" இலிருந்து மீள்விக்கப்பட்டது