பக்கம்:இல்லற நெறி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடிைய இல்வாழ்க்கை 53.7

யோன்னியம் வேண்டப்படும். திருமண உறவில் அத்தகை யோர் எங்ங்னம் பொருத்தபாடு ஆ ை.தல் இயலும்? அத்தகையோர் திருமணம் புரிந்து கொண்டால் தம்மு டைய நரம்பு நோய் நடத்தையைத் திருமண உறவிலும் கொண்டு செலுத்துவர். பெற்ருேரைச் சார்ந்தே இருக்கும் பெண்ணிடம் தற்சார்பு துளிகூட இல்லாததால் கனவனி டம் ஒரு சிறு பிணக்கு ஏற்பட்டாலும் அவள் தாய் வீட் டிற்கு ஓடிவிடுவாள்; அங்ங்னமே தன்னுடைய விருப்பங் கட்குச் சிறு தடை ஏற்பட்டாலும் ஆடவர் வெகுளியின் உச்ச நிலையை அடைந்துவிடுவார்; சிலசமயம் தம் பொறுப்பு களைத் தட்டிக் கழிப்பதற்காகவே குடித்துவிட்டு மயங் கிக்கிடப்பார். இத்தகைய தம்பதிகளின் வாழ்வில் பிரச்சினை அவர்களின் ஆளுமையிலுள்ளதேயன்றி திருமண உறவில் அன்று என்பதை அறிவாயாக.

இன்னெரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிந்து கொள்ளல் வேண்டும். சில சமயம் திருமணம் தம்பதிகளின் நடத்தைக் கோலங்களேயே மாற்றி விடுகின்றது; இருவருமே புதிய மனிதர்களாக மாறிவிடுகின்றனர். திருமண உற வில்ை ஏற்படும் அன்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி ஆகியவை நிறைந்துள்ள புதிய சூழ்நிலையில் தம்பதிகளிடம் அறிவு முதிர்ச்சியும் உள்ளக்கிளர்ச்சி முதிர்ச்சியும் ஏற்பட்டுவிடுகின் நன. எனினும், முக்கியமாக, ஆடவரும் பெண்டிரும் ஒரு வகையில் நிலையான ஆளுமை அமைப்புடனேயே திருமணத் தில் இயைபுறுகின்றனர்; திருமணம் முடிந்ததும் அன்ருட வாழ்வில் அவர்களிடம் அவர்களது முன்னேய நடத்தையே தோன்றுகின்றது.

அன்புடனும் நட்புடனும் கூட்டுறவுடனும் எதையும் பொறுமையுடன் ஏற்கும்இயல்புடனும் ஆடவர்களும் மகளி ரும் சிறந்த கணவர்களாகவும் மனைவியர்களாகவும் திகழ்வ தைச் சில ஆராய்ச்சிகளால் அறிகின்ருேம். இவர்கள் தம் முடைய இந்தச் சிறப்பியல்புகளைக் குடும்பத்திலும் குடும்ப உறவிலும் காட்டுவதுதான் இந்த வெற்றிக்குக் காரணமா கின்றது. பொறுப்பற்ற தன்மையுடனே அல்லது ஆக்கிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/543&oldid=598744" இலிருந்து மீள்விக்கப்பட்டது