பக்கம்:இல்லற நெறி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 54?

பிறருக்கு அன்பும் காதலும் காட்டுவதும் தானும் அவற் றைப் பகிர்ந்து கொள்வதும் முதிர்ச்சியின் மற்ருேர் அறி குறியாகும். குழவிப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் அன்புணர்ச்சி, அடிப்படையில் தன்னைச் சுற்றியே அமை கின்றது. ஒரு குழந்தை தன்னுடைய விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே ஒரு பொருளை விரும்புகின்றது. அது பிறருக்கு அதனைக் கொடுப்பதற்கோ அல்லது பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்வதற்கோ சிறிதும் விரும்புவதில்லை. ஆனால், முதிர்ச்சி யடைந்தவரின் அன்பின் பண்பே வேறு போக்கினேயுடையது. அவர் எண்ணங்களையும், உணர்வுகளையும், உடைமைப் பொருள் களையும் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தையுடையவராக உள்ளார். தான் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன் தன் அன்புக்குரி யாருக்கும் மகிழ்ச்சியை அளிக்கவேண்டும் என்ற எண்ணமும் தான் மனநிறைவு பெறவேண்டும் என்பதுடன் தன் அன்புக் குரியவருக்கும் அதனை அளிக்கவேண்டும் ன் விருப்டமும் அவரிடம் உள் ளது. இத்தகைய அன்புணர்ச்சியே வெற்றி யைத் தரும் திருமண உறவிற்கு மிகவும் இன்றியமையாதது.

முதிர்ச்சியடைந்த சிந்தனையும் உணர்ச்சியும் முதிர்ச்சி டைந்த செயல்களிலும் நடத்தையிலும் பிரதிபலிக்கின்றன. ஒரு குழந்தை மறிவினையின் அடிப்படையில் செயற்படுகின் றது; வயது வந்தவன் சிந்தனையின் அடிப்படை யில் செயற் படுகின்ருன், குழந்தையின் செயல்கள் துடிப்பின் அடிப் படையில்-இயல்பூக்க அடிப்படையில்-நடைபெறுகின்றன. தெருவிற்கு உருண்டோடின பந்தினைப் பற்றுவதற்காக தெரு வின் குறுக்கே ஒடுகின்ருன் சிறுவன்; வன். டிகளாலும் வாகனங்களாலும் தனக்கு நேரிடக்கூடிய விபத்துகளை அவன் சிந்திப்பதில்லை; இந்நிலையில் வயது வந்தவரின் செயல் கள் சிந்தனையின் அடிப்படையில்தான் அமையும்; அவர் நேரிடக்கூடிய இடர்களே எண்ணி அவற்றினைத் தவிர்ப்பதற் கேற்றவாறு தம் செயல்களே மாற்றிக்தொள்வார். முதிர்ச்சி யட்ைந்தவரின் நடத்தையில் வளைந்துகொடுக்கும் தன்மை யும் கட்டுப்பாடும் காணப்பெறும்; நிலைமைக்குத் தகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/547&oldid=598752" இலிருந்து மீள்விக்கப்பட்டது