பக்கம்:இல்லற நெறி.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

இல்லற நெறி


வாறு அவர் தம் செயலைப் பொருத்தப்பாட்டடையும்படி செய்து கொள்வார். அவர் ஆணையையும் ஒழுங்கினையும் ஏற்றுக்கொள்வார்: பொறுப்பையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளவும் கூடும். வாழ்க்கையில் தக்க பொருத்தப் பாடு அடைவதற்காக அவர் பிறருடன் எப்படி வேண்டுமோ அப்படி ஒத்துழைத்து நிலைமையினைச் சமாளித்துக் கொள்வார்.

உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சி மனிதருக்கு மனிதர் அள விலும் தன்மையிலும் மாறுபடும். இந்த உலகில் இரண்டு பேர்கள் ஒரே மாதிரிமாக இருப்பதில்லை. உடல் நிலையிலும், அறிவு நிலையிலும், உள்ளக்கிளர்ச்சி நிலையிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவர். பிறப்பாலும் வளர்ப்பு முறையினாலும் நம்முடைய உடலும் மனமும் அமைகின்றன; பெற்ருே.ரிடமிருந்து நாம் பெறும் உடற்பண்புகளும்' வளருங்கால் சூழ்நிலையின் மூலம் நாம் பெறும் கூறுகளும் நம்மிடம் அமைந்துள்ளன. அங்ஙனமே நம்முடைய ஆளுமை களிலும், உணர்ச்சிகளிலும், மனப்பான்மைகளிலும், காணப்பெறும் வேறுபாடுகள் ஒரளவு நம் பெற்ருே.ரிட மிருந்து அடைந்த உடற்கூறுகளின் காரணமாகவும், ஒரளவு குழவிப்பருவத்தில் நாம் வாழ்ந்த சூழ்நிலைகளிலி ருந்து பெற்ற உள சமூகக் கூறுகளினலும் அமைகின்றன. இந்தச் சூழ்நிலைக் கூறுகள் மனிதருக்கு மனிதர் கட்டாயம் மாறக்கூடுமாதலின், நம்முடைய மனப்பான்மைகளும் நடத் தைக் கோலங்களும் மாறுகின்றன. எடுத்துக்காட்டாக அன் பும் ஆதரவும் நிறைந்த சூழ்நிலையில் வளர்க்கப்பெற்ற ஒரு குழவியிடம் தேவையுணர்வும், உடைமையுணர்வும், பாது காப்பு உணர்வும் வளர்க்கின்றன; பொறுப்பற்ற அல்லது விரோதம் நிறைந்த சூழ்நிலையில் வளர்க்கப்பெற்ற குழவி யிடம் இவ்வுணர்வுகள் வளர்வதே இல்லை. இங்ங்ணம் سایت வரும் மகளிரும் உருப்பெறும் ஆண்டுகளில் தாம் பெறும் உணர்ச்சிகளும் மனப்பான்மைகளும்தாம் அவர்களுடைய முதிர்ச்சிப்பருவத்தில் அவர்களுடைப் ஆளுமையைப் பாதிக் கின்றன. இவையே திருமணத்திலும் வாழ்க்கையிலும்

அவர்கள் அடையும் பொருத்தப்பாட்டு வகைகளுக்கும் காரணமாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/548&oldid=1285343" இலிருந்து மீள்விக்கப்பட்டது