பக்கம்:இல்லற நெறி.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

இல்லற நெறி


பட்டம்பெற்ற ஒரு பெண் பள்ளியிறுதித் தேர்வுகூடிப் பார்க்காத ஆலை முதலாளி மகனுக்கு வாழ்க்கைப்படவும் நேரிடலாம். இத் திருமணங்கள் யாவும் செல்வத்தின் அடிப்படையிலும் அத்தை மகன் மாமன் மகள் உறவு போகக் கூடாதென்ற எண்ணத்திலுைம் ஏற்படக்கூடியவை. இத்திருமணங்களில் சில வெற்றியாதலும் உண்டு; ஒல பொருத்தமில்லாத் திருமணங்களாக முடிவதும் உண்டு. முதலில் குறிப்பிட்ட ஆடவர் அலுவல் பார்க்கும் இடங்களி லும் படித்த பெண்களுடன் தாராளமாகப் பழகுவதை அவர்மனைவி பொறுக்காமல் முரண்படுவதுண்டு. அங்ங்னமே, இரண்டாவதாகக் குறிப்பிட்ட பெண் வீட்டிலும் வெளியி லும் சில படித்தவர்களுடன் தாராளமாகப் பழகுவதைக் கண்டு அவளுடைய கணவன் வீணுக அவளது பழக்கங்களிள் மீது ஐயப்படுவதுண்டு. இங்ங்ணம் இன்றைய வாழ்க்கையில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முரண்பாடுகள் அமைந்த தம்பதிகளைக் காணலாம். இத்தகைய முரண்பாடு களின் காரணங்களைப்பற்றி அவர்கட்கு சிறிதளவு உள்நோக்கு இருப்பினும், அவர்களது வாழ்க்கை செவ்வனே அமைதல் கூடும். இதிலிருந்து வெவ்வேறுபட்ட சமூக பண்பாட்டுச் சூழ்நிலை வேறுபாடுகளைக் கொண்ட இருவரும் திருமணம் புரிந்து கொள்ளக் கூடாது என்று கருதுவதும் தவறு. இங்குக் கணவனும் மனேவியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு ஒருவர் மற்றவரின் மனப்பான்மைக்கேற்ற வாறு நடந்துகொள்ளல் வேண்டும் என்று வற்புறுத்தா திருந்தால், அவர்க ளின் இல் வாழ்க்கை செவ்வையாக அமை யும். இங்ங்ணம் இறு வேறு வாழ்க்சைநிலை, சமூகநிலை, படிப்பு நிலை போன்ற கூறுகளேயுடையவர்களும் மணந்து கொண்டு சிறந்த தம் திகளாகத் திகழ்வதற்கும் ஏராள மான எடுத்துக் காட்டு ஸ் தரலாம், வெவ்வேறு சமயத் தைச் சார்ந்தவர்களும் மணந்து சொண்டு சிறப்பாக இல்வாழ்க்கை நடத்துவதையும் நாம் காணுமல் இல்லை.

ஒத்தவாழ்க் ைசிநிலை, ஒத்தகவர்ச்சிகள், ஒத்த பண்பாடு, ஒத்த சமயம், ஒத்த வாழ்க்கைப் போக்கு முதலியனயாவும் அமைந்தவர்.ஆம் திருமணம் புரிந்துகொண்ட பிறகு தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/550&oldid=1285344" இலிருந்து மீள்விக்கப்பட்டது