பக்கம்:இல்லற நெறி.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்கை 545

பொருத்தப்பாடு அமையாது திண்டாடுவதையும் கான்கின் ருேம். இதற்குக் காரணம் என்ன? திருமணம் என்பது மேற் குறிப்பிட்டவை அனைத்தும் பொருந்துவதற்காகச் செய்யப் பெறும் ஏற்பாடு அன்று. திருமணம் என்பது, ஏற்கனவே பல இடங்களில் வற்புறுத்தியதுபோல், அன்புக்கும் நம்புக் கும், திருப்தியான முறையில் அமைந்த பாலுறவுக்கும், குடும்பத்தை அமைப்பதற்கும் செய்யப்பெறும் ஒர் ஏற்பாடு என்பதை நினைவில் இருத்துவாயாக. எனவே ஒரு தம்பதிகள், நல்ல நண்பர்களாகவும், நல்ல பாலுறவுப் பங் காளிகளாகவும், நல்ல பெற்ருேர்களாகவும் இருப்பின் அவர்கள் மும்மடங்கு ஆசியைப் பெற்றவர்களாவர். ஆயினும், உண்மை வாழ்கையில் இவை மூன்றும் சமமாக அமையா. இவற்றுள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வற்றில் அடிப்படைத் தேவைகளையும் நோக்கங்களையும் பெற முடியாத நிலைமையும் ஏற்படுகின்றது. இதையும் நீ பலரது வாழ்க்கையில் காணலாம்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

@一35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/551&oldid=598762" இலிருந்து மீள்விக்கப்பட்டது