பக்கம்:இல்லற நெறி.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546

இல்லற நெறி


4.7

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலன் தெரிவிக்க.

சென்ற கடிதத்தில் திருமணப் பொருத்தப்பாட்டில் பிரச்சினைகளைத் தரும் இருவகை மூலங்களே மட்டும் ஆராய்ந் தேன். அவை யாவும் தம்பதிகளைப்பற்றியுள்ள அகக்கூறு களால் எழுபவையாதலின், அவற்றைத் தனியாக ஆராய்ந் தேன். இனி, தம்பதிகளுக்குப் புறக்கூறுகளாக அமையும் மூலங்களையும், அவற்றில் எழக்கூடிய ஒரு சில பிரச்சினை களையும் இக்கடிதத்தில் கூறுவேன்.

பொருளாதாரக் கூறுகள்: திருமணப் பொருத்தங்களை ஆராய்ந்தபொழுது பொருளாதாரப் பொருத்தத்தைக் குறிப்பிட்டேன் அல்லவா? கணவன்தான் பொருள் தேடும் பொறுப்பாளி என்றும், மனைவி குடும்பத்தை நடத்தும் பொறுப்பினையுடையவள் என்றும் குறிப்பிட்டதும் உனக்கு நினைவு இருக்கும். பழங்காலத்தில் பெரும்பாலும் எல்லாச் சமூகங்களிலும் இந்நிலையே இருந்து வந்தது. இன்றைய சமூகத்தில் இந்நிலை மாறிக் கொண்டு வருகின்றது. நாட்டுப் புறங்களிலும் வணிகர் சமூகத்திலும் ஆடவன்தான் சம்பா திக்க வேண்டும் என்ற நிலைமை இருந்த போதிலும் படித்த நடுத்தர வருவாய் உள்ள சமூகங்களில் இந்நிலை மாறி வரு கின்றது. பெண்கள் அதிகமாகப் படித்து வருவதால், அவர் களும் அலுவல்கள் பார்க்கத் தலைப்பட்டு விட்டனர். படிக் காத பாமர ஏழைக் குடும்பங்களில் பெண்களும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலிருப்பதை நாம் காணுமல் இல்லை. இதனுல் பெண்ணுலகத்திற்கு ஓரளவு சுதந்திரம் வந்துள்ளது. இதனுல் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரச் சுதந்திரம் இல்லாதபொழுது கணவனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/552&oldid=1285345" இலிருந்து மீள்விக்கப்பட்டது