பக்கம்:இல்லற நெறி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இல்லற நெறி


எக்ஸ் இன நிறக்கோல் உள்ள பெண் கரு அணுவுடன் "எக்ஸ்' இன நிறக்கோலுள்ள ஆண் கரு அணு சேர்ந்தால் அதல்ை பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்: அங்ங்னமின்றி , எக்ஸ் இன நிறக்கோலுள்ள பெண் கரு அணுவுடன் ஒய் இன நிறக்கோலுள்ள ஆண் கரு அணு சேர்ந்தால் அதனால் பிறக்கும் குழந்தை ஆணுக இருக்கும். எனவே, பிறக்கப்போகும் குழந்தை ஆளு, பெண்ணு என்று அறுதியிடும் கூறு தந்தையிடமே உள்ளது என்பதை நீ அறிதல் வேண்டும். ஒரு தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று பெண்ணைக் குறை சொல்வது அறியாமை. ஆணை மட்டும் குறை சொல்லமுடியுமா? அவனுடைய எந்த விந்தனு முதலில் முட்டையைப்போய் அடைகின்றது என்று அவனுக்கும் தெரியாதல்லவா? இதைத் தற்செயல்' ' தான் அறுதியிடுகின்றது. பறவை களிலும், வண்ணத்திப் பூச்சிகளிலும் சிலவகை மீன்களிலும் இந்த நியதி மாறுபட்டுள்ளது. அவற்றுள் ஒய் நிறக்கோல் பெண்ணின் முட்டையிலிருக்கின்றது!

'ஜீன்கள் : ஒவ்வொரு நிறக்கோலிலும் மரபுவழிக் கூறுகள் அடங்கிக் கிடக்கின்றன என்று மேலே கூறினேன். இந்த மரபுவழிக் கூறுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் நுண் னிய உறுப்புகளை 'ஜீன்கள் என வழங்குவர். ஜீன்களின்’ தொகுதியாலேயே நிறக்கோல்கள் அமைந்து கிடக்கின்றன. உயர்ந்த நுண்பெருக்கியாலும் ஜீனைத் தனியாகக் காண்பது அரிது. ஆற்றல்மிக்க நுண்பெருக்கியால் ஒரு நிறக்கோலை ஆய்ந்ததில் அது கயிற்றில் கோக்கப்பெற்ற உருண்டை மணிகள்போல் காணப் பெறுகின்றது. நிறக்கோலின் தோற்றத்தைப் படத்தில் காண்க (படம் 5). முக்கியமாக, அஃது ஒரு திட்டமான ஒழுங்கில் அமைக்கப்பெற்ற ஜீன் களின் கோவையே. மானிட ஜீன்கள் கிட்டத்தட்ட ஆயிரத் திற்கு மேற்பட்டவை; அவை 46 நிறக்கோல்களிலும் சம

56. தற்செயல்-Chance. 57. §orséir—Genes:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/56&oldid=1285103" இலிருந்து மீள்விக்கப்பட்டது