பக்கம்:இல்லற நெறி.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

இல்லற நெறி


உடல், உளசோதனைகள் கண்டறியப் பெறவில்லை. ஆயினும், அநுபவத்தால் இதனை அறுதியிடலாம் என்று சில மேட்ை டறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களின் கருத்துப்படி திருமணம் புரிந்து கொள்வதற்கு முன்னர் அவர்கள் நன்கு பழகும் வாய்ப்புகள் தருதல்வேண்டும்; பல்வேறு சந்தர்ப் பங்களில் தனியாகவும் குழுவிலும் அவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்று காணவும், ஒய்விலும் வேலை யிலும், இன்பத்திலும் துன்பத்திலும், சாதாரண நிலைரிலும், நெருக்கடியான நிலையிலும் அவர்கள் எவ்வாறு செயற்படு கின்றனர் என்று காணவும், ஒரு வருடைய மனப் பான்மைகள் உளப்போக்குகள், மதிப்பீடுகள் முதலிய வற்றை மற்றவர் அறியவும் வாய்ப்புகள் தருதல்வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் இருவருடைய இயல்புகளும் பிறவும் பெரும்பாலும் ஒத்திருந்தால் அவர்கள் சிறந்த தம்பதிகளாதல் கூடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். நமது நாட்டுப் பழக்கவழக்கங்களேயொட்டி இம்முறைகள் எந்த அளவு சாத்தியப்படும் என்பதை அநுபவத்தால்தான் அறுதியிடுதல் வேண்டும்.

திருமணம் என்பது நீண்டகாலத்துப் பயிராதலின் அதனை அவசரமாக நிச்சயித்தல் பெருந்தவருக முடியும், இன்றைய நாகரிக உலகில் 'கண்டதும் காதல்’ என்ற முறையில் நிச்சயிக்கப்பெறும் திருமணங்கள் பெரும்பாலும் வெற்றி யளிக்காதிருப்பதைக் காணலாம்: திருமணம் வெற்றி பெறு வதற்கு இன்றியமையாது வேண்டப்பெறுவது காதலே. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஆழ்ந்த அன்பு இல்லை யாயின் திருப்தியான திருமண உறவு ஏற்படாது என்பது உண்மையே. ஆனால், காதல் என்பது ஒர் உள்ளக் கிளர்ச்சியன்று; அது பல்வேறு உணர்வுகளையும் ஊக்கிகளை யும் கொண்ட ஒரு சிக்கலான உள்ளக்கிளர்ச்சி என்பதைத் தம்பதிகள் நன்கு உணர்தல் வேண்டும். முக வெட்டு, மேனியழகு, உறுப்புகளின் திரட்சி இவற்றை மட்டிலும் அடிப்படையாகக்கொண்டு எழுந்த காதல் நாளடைவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/564&oldid=1285351" இலிருந்து மீள்விக்கப்பட்டது