பக்கம்:இல்லற நெறி.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடிைய இல்வாழ்க்கை 36. I

49

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலன் வேண்டுகிறேன்.

மணமக்கள் மகிழ்ச்சியான வாழ்வு பெறுவதற்குத் துணை யாக இருக்கக்கூடிய குறிப்புகளைத் தருமாறு எழுதியிருந் தாய். வாழ்க்கை என்பது வரையறை இல்லாத ஒரு பெருங் கடல், அதில் பிரயாணம் செய்வோருக்குக் குறிப்புகள் தருவதென்பது எளிய செயலன்று. என்ன குறிப்புகளைத் தந்தாலும் அவை யாவும் எல்லோருக்கும் பொருந்துவதும் கடினம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் இக்குறிப்புகள் ஒரளவுதான் பொருத் தமாக இருக்கும். பலருக்கும் ஒரளவு பயன்தரத்தக்க வகை யில் ஒரு சில குறிப்புகளை இக்கடிதத்தில் தருகின்றேன்; உனக்கேற்றவற்றை மட்டிலும் எடுத்துக்கொள்க.

முதலாவது: ஒவ்வொருவரும் தம்மை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்படியானுல் என்ன? உடல் செயற் படும் முறைகள், மனம் செயற்படும் முறைகள், மானிட இயல்பு ஆகியவற்றை நன்கு அறிந்துகொள்ளல் வேண்டும்: நல்ல உடற்பொருத்தம் அமையவேண்டுமாயின் பால்செயல் களேயும் இனப்பெருக்கச் செயல்களையும் பற்றிய அறிவுநன்கு ஏற்படவேண்டும்; உள்ளக்கிளர்ச்சிப் பொருத்தம் வேண்டு மாயின் சிந்தனை, உணர்ச்சி ஆகியவை பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாதது. நம்மை எவ்வளவுக்கெவ்வளவு நன்கு அறிந்து கொள்கிருேமோ, அப்படித்தான் நம்முடைய துணையைப்பற்றியும் நன்கு அறிந்துகொள்ள முடியும். இத் தகைய அறிவு புரிந்துகொள்ளும் மனப்பான்மையையும், தெளிவினையும், சகிப்புத் தன்மையையும் பிறரைப்பற்றிய

இ-36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/567&oldid=598796" இலிருந்து மீள்விக்கப்பட்டது