பக்கம்:இல்லற நெறி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 莎五

மின்றி வினியோகிக்கப் பெற்றுள்ளன. ஜீன்கள் எப்பொழு தும் இரட்டைகளாகவே இருக்கும். அவைகளில் ஒன்று தாயிடமிருந்தும் மற்ருென்று தந்தையிடமிருந்தும் வந்தவை யாகும். இணையாகவுள்ள நிறக்கோல்களின் ஒர் இணையிலுள்ள

படம் 5: ஒரு நிறக்கோலின் தோற்றம். 1. நீண்ட நிலை; 2. சுருளத்தொடங்கும் நிலை; 3. சுருள் கள் இறுகும் நிலை; 4. இறுக்கமாகச் சுருண்டு கோல் போன்ற தோற்ற நிலை.

ஒரு நிறக்கோலின் ஒரு ஜீன் அந்த இணையிலுள்ள மற்ருெரு நிறக்கோலின் ஒரு ஜீனுடன் இணைந்திருக்கின்றது. இந்த ஜீன்கள்தாம் ஒரே மாதிரியான முறையில் அல்லது மாறு பட்ட முறையில் ஒரே செயலைப் புரிகின்றன. ஒர் இனையி லுள்ள ஜீன்கள் தம் செயலில், ஒரே மாதிரியான முறையில் செயற்பட்டால் அவற்ருல் ஆக்கப்பெரும் சிறப்பியல்பு தலைக்காட்டும். இவ்வாறு காட்டுவதற்கு வேறு இ&ன உயிரணுக்களின் தலையீடு இல்லாதிருத்தல் வேண்டும். அவை மாறுபட்ட முறையில் செயற்பட்டால் இந்த இரண்டு ஜீன் களின் வேறுபட்ட செல்வாக்குகள் ஒன்ருக இணைந்து இடைப்பட்ட சிறப்பியல்பினை விளைவிக்கலாம்; அல்லது ஒரு ஜீன் பிறிதொன்றின் செல்வாக்கை மறைத்தும் விடலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/57&oldid=598802" இலிருந்து மீள்விக்கப்பட்டது