பக்கம்:இல்லற நெறி.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566

இல்லற நெறி


ஆருவது: அறிவறிந்த மக்கட் பேறு' என்று வள்ளு வர் வாக்கை எண்ணி குடும்பக் கட்டுப்பாட்டிை அறிவு டைமையுடன் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மணமக்கள் நன்கு உணர வேண்டும். முதற் குழவிக்குத் திட்டமிடுவதற்கு முன்னர்த் தம்பதிகளிடம் நல்ல உள்ளக் கிளர்ச்சிப் பொருத்தம் ஏற்பட்டுவிடல் வேண்டும். கீரியும் பாம்புமாகஇருக்கும் நிலையில் குழவியைப்பெற்று வளர்த்தல் சமுதாயத்திற்கே பெருந் தீங்கு விளைவிப்பதாகும். மணமக் கள் நம்பிக்கையான கருத்தடை முறைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்; அவற்றைக் கையாளும் முறைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெற்ருேர்கள் விரும்புங்கால் குழந்தைப் பேறு ஏற்படுதல்தலையாயது: தற்செயலாகக் குழந்தைப் பேறு ஏற்படுவது சிறந்ததன்று. உடல் நலத்துடனும் மன வளத்துடனும் வாழும் பெற்ருேt கள் அறிவியல் முறையில் திட்டமிட்டுக் குழவிகளைப் பெறு தல் மிகவுப் சிறந்தது. மிக இளமையில் குழந்தைப்பேறு ஏற் படுவதும், முதுமையில் அப்பேறு ஏற்படுதலும் விரும்பத் தக்கதன்ற தக்கப் பொறுப்புகள் வந்தவுடன் குழந்தை களைப் பெறுதல் அறிவுடைமையாகும். உடல் நிலை உள்ள நிலைபற்றிய காரணங்களின் அடிப்படையில் இளமையில் குடும்பம் வளர்தல் விரும்பத்தக்கது. ஒரு குழவி பிறப்பதற் கும் மற்ருெரு குழவி பிறப்பதற்கும் இடையிலுள்ள கால அளவு நான்கு யாண்டுகள் இருப்பது சிறந்தது; தாயின் உடல்நிலைக்கு மிகவும் நல்லது. நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை மூன்று குழவிகட்குமேல் தாய்தந்தையரா தல் விரும்பத்தக்கதன்று. குழவிகளை அறிவறிந்த மக்க ளாகச் செய்தலும் அவர்களைச் சிறந்த முறையில் வாழ்க் கையில் ஈடுபடச் செய்தலும் பெற்ருேரின் முதற் கடமை என்பதை மணமக்கள் நன்கு உணர்தல் வேண்டும்.

ஏழாவது: திருமண வாழ்வில் மணமக்களிடையே சகிப் புத்தன்மை வளர வேண்டும். திருமணத்தை ஒர் இன்னிசை நிகழ்சிகிக்கு ஒப்பிடலாம். ஒருவரே ஒருபண்ணில் பாடி தாள

48. குறள்-31,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/572&oldid=1285355" இலிருந்து மீள்விக்கப்பட்டது