பக்கம்:இல்லற நெறி.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 56.9

களால் பல தடைகளை நீக்குவதற்குத் துணையாக இருப்பர். மணமக்கள் மறைந்த நிலையிலிருந்து ஊக்கிவிடும் முரன் பாட்டு மூலங்களை அறிதல் அருமையினும் அருமையாகும். இணக்கமின்மைக்குரிய சில காரணங்கள் தெளிவாகப் புனைகா. ஒரு சிறிய எளியவாதத்தின் பின்புறத்தில் ஆழ்ந்த பாதுகாப்பு இன்மையின் உணர்ச்சி, அல்லது அதிகார அவா, அல்லது பாலுறவுபற்றிய ஏமாற்றம் அமைந்து கிடக்க ஏது வுண்டு. மணமக்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இயலாவிடில் தக்காரைக்கொண்டு அதற்குத் தீர்வு காணல்வேண்டும். திருமண வெற்றிக்கு இது அவசியம் வேண்டும்.

பத்தாவது : தம்மைப் பிறர் நிலையில் வைத்தென்ணுத லும் பிறரைத் தம்நிலையில் வைத்துக் கருதுதலும் ஆகிய பண்பு மணமக்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒருவர் மற்றவரது உணர்ச்சிகளையும் தேவைகளையும் அறிதல் வேண்டும். ஒருவர் செய்யும் தவற்றின மற்றவர் உடனுக் குடன் மன்னித்தல் வேண்டும். இயன்றவரை ஒருவர் மற்ற வர்மீது ஆக்கிரமிப்பு கூடாது; ஒருவர் மற்றவரைக் கடிதல் கூடாது; மரியாதைக் குறைவாகவோ அல்லது நம்பிக்கைக் குறைவாகவோ நடந்துகொள்ளல் ஆகாது. இவை யாவும் மானிட உறவுக்கு மிகவும் வேண்டற்பாலவை. திருமண உறவிலும் இவ்விதிகள் கையாளப்பெறின்திருமணம்வெற்றி யுடன் திகழும். நம்நாடு விடுதலை பெற்றுள்ளது. மக்கள் எதனையும் விடுதலையுணர்ச்சியுடன் சிந்தனை செய்கின்றனர். குடும்த்திலும் இந்த விடுதலையுணர்வு புகத் தொடங்கியுள் ளது. திருமண வாழ்க்கையில் எழும் எல்லாப் பிரச்சினைகளை யும் குடியாட்சி முறையில் தீர்த்துக் கொள்ள முயன்ருல் அனைத்தும் சீர்படும். திருமண வாழ்க்கையும் சீரு டன்பொலி வுறும் என்பதை மணமக்கள் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.

இதுகாறும் எழுதிய பல கடிதங்களில் திருமணம்பற்றிய பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்தேன். இவற்றை உயிரியல் அடிப்படையிலும் சமூக மனப்பான்மைகளின் அடிப்படை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/575&oldid=598814" இலிருந்து மீள்விக்கப்பட்டது