பக்கம்:இல்லற நெறி.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

இல்லற நெறி


50

அன்பார்ந்த செந்தில் வேலனுக்கு.

நலம். நலனேயாகுக.

இதுகாறும் எழுதிய கடிதங்களில் திருமணத்தைப்பற்றி யும் இல்வாழ்க்கையைப்பற்றியும் பல்வேறு செய்திகளை அறி வியல் அடுப்படையில் அறிந்து கொண்டாய். திருமண வாழ்க்கையில் புகும்-புகுந்த-ஒவ்வொரு நம்பிநங்கையருக் கும் அவை மிகவும் இன்றியமையாதவை; பொன்னேபோற் போற்றி உணரத்தக்கவை. இனி, பொதுவாக ஒரு சில கருத் துகளைத் தெரிவிப்பதுடன் வாழ்த்து கூறி இக்கடிதத் தொடரை முடிக்கின்றேன்:

ஆணும் பெண்ணும் உற்ற பருவம் எய்தியதும் இன்ப உணர்வு தோன்றுகின்றது; இருவரும் இயற்கைவழி கூடி இல்வாழ்வில் நுழைவதற்காகவே அவ்வுணர்வு தோன்று கின்றது. திருமணம் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்துங் கால் இருவரிடையேயிருந்த அழுக்காறு, அவா முதலிய மன மாசுகள் தேய்ந்து அழிகின்றன. அவை இருந்த இடத்தில் பொறுமை, தியாகம், இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை யாயுள்ள அன்பு முதலியவை படிப்படியே கால் கொண்டு கோயில் கொள்ளுகின்றன. இருவர் வாழ்விலும் தன்னலம் கெட்டுப் பரநலம் பெருகுகின்றது. இவன் இவள் ஆகின் ருன் இவள் இவன் ஆகின்ருள். இருவரும் ஒருயிர் ஈருடல்: எனப் பொவிகின்றனர். ஒருவரிடத்தில் முன்னே கட்டுப் பட்டுக் கிடந்த அன்பு இப்பொழுது இருவர் பாலும் பரவி நிற்கின்றது குழந்தைப்பேறு ஏற்பட்டதும் இவ்வன்பு மூன் ருவது உயிர்களிடைப் பரவி நிற்கின்றது. இருவரும் தம்மை மறந்து குழந்தைகளின் நலத்துக்கென வாழ்வோராகின் றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/578&oldid=1285358" இலிருந்து மீள்விக்கப்பட்டது