பக்கம்:இல்லற நெறி.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல் வாழ்த்து ፱? $

கல்லா மழலைக் களியுறல்

கலந்து கொஞ்சும் சொல்லா லுருக்கி அழுதோடித்

தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சி மைந்தர் இல்லாதவர்க்கு மனைவாழ்வின்

இனிமை என்னும்?? என்று பாண்டு குந்திக்கு மகப்பேற்றின் சிறப்பை எடுத் தோது தலால் மக்கட்பேற்றின் பெருமையை உணரலாம். மகப்பேற்றிற்குப் பிறகு இருவரும் இளமையில் ஏட்டில் படித்த அன்மை இப்பொழுது வாழ்வில் காண்கின்றனர்.

உடல்-மனம்-அறிவு என்னும் மூன்றும் ஒருமைப்பட்ட வாழ்வே அன்புக்குரிய இல்வாழ்வாகும். இம்முத்திற ஒற்று மையை இருபாலாரிடையே தோற்றுவிப்பது கல்வியாகும்; கல்வியே இவ்வொற்றுமைக்கு அடிப்படைக் கல்லாகும். இத்தகைய கல்வியைப் பெற்று உற்ற வயதில் மேற்கொள் ளும் கலவிதான் உடல்வளத்துக்கும் அறிவு விளக்கத்திற்கும் துணை செய்வதாகும்.

பொறையிலா அறிவு யோகப்

புணர்விலா இளமை மேவத் துறையிலா வனச வாவி

துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி

நலமிலாப் புலமை நன்னர்ச் சிறையிலா நகரம் போலும்

சேயிலாச் செல்வ மன்றே. என்ற வளையாபதிச் செய்யுளை நோக்குக. எனவே, ஒரு பாதி யாகிய ஆணும் ஒரு பாதியாகிய பெண்ணும் தத்தமக்குப்

3, வில்லிபாரதம்-சம்பவ ச் சுருக்கம்-58 |எஸ். ராஜம்

பதிப்பு.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/579&oldid=598822" இலிருந்து மீள்விக்கப்பட்டது