பக்கம்:இல்லற நெறி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இல்லற நெறி


வேருெரு ஜீனின் முன்னிலையில் வன்மையான ஜீன் ஒன்று ஒரு சிறப்பியல்பினை உண்டாக்குமேயானல், அஃது ஓங்கி நிற்கின்றதாகப் பேசப்பெறும்; மறைந்த உயிரணு பின் தங்கி நிற்கின்றதாகக் கூறப்பெறும். இச்செய்திகள் உனக்குப் புரிந்துக்கொள்வதற்குச் சற்றுக் கடினமாக இருக்கலாம். இவைபற்றிய முழு விளக்கங்களை உயிர் நூல் களில் கண்டு தெளிக. எனினும், சில எடுத்துக்காட்டுகள் ஒரளவு இச்செய்திகளைத் தெளிவாக்கும்.

மரபுவழிப் பண்புகள் இறங்கும் முறை : முதலாவதாக உயரம் என்ற பண்பினைத் தம்முள் கொண்ட இரண்டு ஜீன் களை எடுத்துக்கொள்வோம். பெற்ருேர் இருவரும் குட்டை யாக இருந்தால் அவர்கட்குப்பிறக்கும் குழந்தையின்உடலில் உள்ள உயிரணுக்கள் எல்லாவற்றிலும் உயரத்தைப்பற்றி யுள்ள ஜீன்களில் குட்டையாக வளரும் தன்மைதான் குடி கொண்டிருக்கும். குழந்தையும் பெற்ருேர்களைப்போல் குட்டையாகவே இருக்கும். பெற்றேர்கள் இருவரும்நெட்டை யாக இருந்தால் அவர்கட்குப் பிறக்கும் குழந்தையும் உயர மானவளுக வளர ஏதுவிருக்கின்றது. ஆளுல், தாய் குட்டை யானவளாகவும் தந்தை நெட்டையானவராகவும் இருந்து விட்டால் அவர்கட்குப் பிறக்கும் குழந்தையின் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் உயரம் என்ற பண்பிற்குப் பொறுப்பாகவுள்ள ஜீன்களில் ஒன்று நெட்டையாக வளரும் தன்மையைத் தன்னுள் கொண்டிருக்கும்; இன்னென்று குட்டையாக வளரும் தன்மையைப்பெற்றிருக்கும். இவ்வாறு வேறுபட்டுள்ள இரண்டு ஜீன்களில் ஒன்று மற்றதைவிட ஆற் றல் வாய்ந்ததாக இருக்கும்; இன்னென்று மிகவும் தளர்ந்த தாக இருக்கும். எடுத்துக்காட்டாக, குட்டையான தாய்க் கும் நெட்டையான தந்தைக்கும் பிறந்த குழந்தையிடம் உள்ள ஜீன்களில் நெட்டைத்தன்மையைக்கொண்ட ஜீன்கள் குட்டையாக வளரும் தன்மையுடைய மற்ற ஜீன்களைவிட

58. Gålst ģipé)–Dominant: 59, பின்தங்கி நிதறல்-kecessive.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/58&oldid=1285104" இலிருந்து மீள்விக்கப்பட்டது