பக்கம்:இல்லற நெறி.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல வாழ்த்து 虏75

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.8

என்ற வள்ளுவர் வாய்மொழிகை ஒர்க. ஆற்றின் ஒழுக்கி அறன் இருக்கா இல்வாழ்க்கை' என்ற சொற்ருெடரை உன்னு:க .

வையத்துள் வாழ்வாங்கு வாழவே ஒருத்தியும் ஒருவ னும் கூடி வாழ்கின்றனர். அழியா இன்பத்தைப் பெறவே இல்வாழ்க்கை வழியாக அமைகின்றது. இத்தகைய இல் வாழ்க்கையில் அழியா இன்ப ஊற்றைத் திறக்கும் கருவி பெண்ணு அமைகின்றது: "இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை' என்ற அவ்வைப் பிராட்டியாரின் அமுத வாக்கை எண்ணுக. பெண்ணில்லா வீடு காடு; சுடுகாடு; நரகம் இல்வாழ்க்கையில் குடும்ப விளக்காக-தெய்வமணி விளக்காக-அமைபள்ை பெண் ஆவாள்.

மழைதிளைக்கு மாடிமாய் மாண்பமைந்த காப்பாய் இழைவிளேக்கு நின்றிமைப்பின் என்னும்-விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர் காடு.8

மோண்ட-மாட்சிமைப்பட்டl

என்ற நாலடியாரை நோக்குக. எவ்வளவு செல்வச் சிறப் புடையதாயினும் நல்ல மனயாள் இல்லாத வீடு சிறிதும் பயன்படாது என்பது உணரத் தக்கது.

இல்வாழ்க்கையில் அழியா இன்பம் என்பது கலவியால் மட்டிலும் விளைவதன்று; அது கலவியுடன் பிறவும் சேர்ந்த ஒன்று. அது புணர்ச்சி கடத்த ஒரு நிலையில் கைக்கூடுவது.

5. குறள்-48 6. குறள்-48 7. மூதுரை-51

3. நால டியாfo-35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/581&oldid=598828" இலிருந்து மீள்விக்கப்பட்டது