பக்கம்:இல்லற நெறி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இல்லற நெறி


கின்றன. இதையும்ஒர் எடுத்துக்காட்டால்விளக்குகின்றேன். நெட்டையான தந்தைக்கும் குட்டையான தாய்க்கும் பிறந்த குழந்தையின் உடல் உயிரணுக்களில் உயரம் என்ற பண்பிற்குக் காரணமான ஜீன்களில் ஒன்று நெட்டையாக வளரும் தன்மையையும், மற்ருென்று குட்டையாக வளரும் தன்மையையும் கொண்டிருக்கும் என்பதை நீ அறிவாயல் லவா? இந்தக் குழந்தை இளைஞனுகும்பொழுது அவனுடைய விந்தனு தயாராகையில் தன்னுள் இருக்கும் நிறக்கோல் களைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளுங்கால் உயரம் என்ற பண்பிற்கு உரித்தான ஜீன்களில் இரண்டில் ஒன்றை இழந்து விடுகின்றது. அது தாயிடமிருந்து வந்த குட்டையாக வளரும் தன்மையைக் கொண்ட ஜீனகவும் இருக்கலாம்; அல்லது தந்தையிடமிருந்து வந்த நெட்டையாக வளரும் தன்மையைக் கொண்ட ஜீனுகவும் இருக்கலாம். ஆகவே குழந்தை பெரியவனுகி அவனுடைய விந்தணு வேருெரு பெண்ணின் முட்டையணுவுடன் சேரும்பொழுது அதனல் பிறக்கப்போகும் குழந்தைக்கு உயரம் என்ற பண்பினைக் கொண்டுள்ள ஒரு ஜீன் அதனுடைய தந்தை வழிப்பாட்ட னிடமிருந்தோ, அல்லது பாட்டியிடமிருந்தோதான் வரு கின்றது. பாட்டி, பாட்டன் என்ற இரண்டு பேரிடமிருந்து உயர ஜீன்கள் வரமுடியாது. அதேபோல் மற்ருெரு பகுதி ஜீன் தாய் வழிப்பாட்டன் அல்லது பாட்டியிட்மிருந்துதான் வருகின்றது. இவ்வாறு வந்த உயரத்திற்குக் காரணமாக இருக்கும் ஜீன் குட்டைப் பண்புடையதாக இருக்கு மாயின் பிறக்கப் போகும் பேரனின் உடலில் உள்ள ஜீன் கள் யாவும் குட்டையாக வளரும் தன்மையுடையனவாக இருந்து அவனைக் குள்ளனுக்குகின்றன; அல்லது இரண்டும் நெட்டைப்பண்புடையனவாக இருப்பின் பேரன் நெட்டை யனக வளர்கின்ருன் ஒரு குட்டை ஜீனும் ஒரு நெட்டை ஜீனுமாக இருந்து விட்டால், குட்டை ஜீன் நெட்டை ஜீனேவிட வன்மை மிக்கதாக இருந்தால், பேரன் குட்துை யாகவே வளர்வான். தாய் தந்தையர் இருவரும் நெட்டை ஆாக இருந்தும் அவர்கட்குக் குட்டையாக ஒரு குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/60&oldid=1285105" இலிருந்து மீள்விக்கப்பட்டது