பக்கம்:இல்லற நெறி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 55

பிறப்பதற்கும், அல்லது தாய் தந்தையார் இரு வரும் பொன்னிற மேனியராக இருந்தும் அவர்களுடைய குழந்தை மாநிறமேனியதாக இருப்பதற்கும் பாட்டன் பாட்டி வழியே குழந்தையிடம் வந்துள்ள ஜீன்களே காரணமாகும்:

மேற்கூறியவற்ருல் ஒவ்வொரு குழந்தையும் தாயிட மிருந்தும் தந்தையிடமிருந்தும் ஒரே மாதிரி மரபு வழியைப் பெறுகின்றது என்பது பெறப்படுகின்றதல்லவா? இந்த ஒவ் வொரு பெற்ருேரும் தத்தம் பெற்றேர்களிடமிருந்து சமநிலை களில் மரபுவழியைப் பெறுகின்றனர் என்றும் அவர்களும் அங்ங்னமே தம் பெற்ருேர்களிடம் சமமாகப் பெறுகின்றனர் என்றும் தெரிகின்றது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய மரபுவழிப்பண்புகளில் பாதியை நேர் பெற்ருே ரிடமிருந்தும், பகுதியை பாட்டன்-பாட்டிமாரிடத்தும், ! ப கு தி ைய முப்பாட்டன்-பாட்டியமாரிடமிருந்தும், இங்ங்னமே தொடர்ந்து வடிவகணித விகிதத்தில் பெறு கின்றது. வாழ்க்கை என்னும் நீரோட்டம் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றது; குழந்தை தன்னுடைய மூலதனத்தைப் பெற்ருேர்களிடமிருந்து அல்லது பெற்ருேர் கள் மூலம் பெறுகின்றது. இங்ங்னம் ஒரு குழந்தையின் மரபு வழிப் பண்புகள் அதன் முன்னேர் அனைவரையும் பொறுத்த தாதலின் ஒரு குழந்தையின் தாடை அதன் தாயின் தாடை யைப் போன்றுள்ளது; அதன் நெற்றி அதன் தந்தையி னுடையதைப் போன்றுள்ளது; அதன் கூந்தல் பாட்டியி னுடையதைப்போல் காணப்படுகின்றது; அதன் பிடிவாத குணம் பாட்டனுடையதைப்போல் இருக்கின்றது. இவ் வாறு காணப்பெறுவதற்கு இந்த ஜீன்களே காரணமாகும்.

மரபுவழியாக இறங்கக்கூடிய பண்புகள்: இதுகாறும் அறிந்தவற்றிலிருந்து எவை எவை குழந்தையிடம் மரபுவழி யாக இறங்குகின்றன என்பதை அறிந்து கொள்ளும் அவா வுடையவனுக இருப்பாய் என்று கருதுகின்றேன். அவற்றைப்

6 1. sulqaj &swīg, sâàøiĥ-Geometrical ratio,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/61&oldid=598870" இலிருந்து மீள்விக்கப்பட்டது