பக்கம்:இல்லற நெறி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இல்லற நெறி


பற்றியும் சிறிது கூறுவேன். நீளமான அல்லது சங்பையான மூக்கு, உயரம், கூந்தலின் நிறம், நெளிந்த அல்லது நீண்ட கூந்தல், நீண்ட அல்லது குட்டையான பருத்த விரல்கள், கருவிழிகள், நீலவிழிகள், செம்மை படர்ந்த விழிகள், பொன்னிறமேனி, மாநிறமேனி, நாவற்பழமேனி, குட்டை, நெட்டைஎன்று ஒருவருடைய தோற்றத்தில் காணப்பெறும் பல சிறப்பியல்புகள் பல தலைமுறைகளிலிருந்து குழந்தைக்கு வருகின்றன. கூர்த்தமதி, செய்திகளை விரைவாக ஏற்குந் திறன், மந்தமதி முதலியனவும் மரபுவழிப் பண்புகளே. ஆழ்ந்த யோசனை, அவசரக் குடுக்கைத்தனம், கவனமின்றிக் காரியங்களைப் பொறுமையின்றிச் செய்தல், தந்திரமாகவும் எளிதாகவும் செயல்களையாற்றல் போன்ற பண்புகளும் மரபு வழியாகக் குழந்தையிடம் காணப்பெறலாம். எவ்வளவு ஊட்ட உணவுகளை உண்டாலும் குச்சிபோல் இருப்பது, எவ்வளவுபட்டினிகிடந்தாலும் பலூன்போல் பருத்திருப்பது போன்ற தன்மைகளும் மரபுவழியைப்பற்றியனவே. நெஞ்சு படபடப்பு, கைகால் உதறல் போன்ற நரம்புத்தளர்ச்சி பற்றிய குணங்களும் மரபுவழியாகவே ஏற்படுகின்றன:

மரபுவழிபபற்றிய செய்திகளை ஒரே கடிதத்தில் முடித்து விடவேண்டும் என்று எண்ணியதால் கடிதம் சற்று நீண்டு விட்டது. மரபுவழியுடன் இணைத்து அறியவேண்டியது சூழ்நிலையின் பங்கு ஆகும் ஒரு குழந்தையின் பிறப்பில் காணப்பெறும் குறைகள் யாவும் மரபுவழியாக வந்தனவா? அன்றி சூழ்நிலையால் ஏற்பட்டனவா? மரபுவழியாக வரு பவை யாவை? சூழ்நிலையால் ஏற்படுபவை எவை? அங்ங் னமே, நோய்கள் மரபுவழியாக வருகின்றனவா? அன்ரு? இவையற்றிய கருத்துகளே அடுத்த கடிதத்தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

62, &psilä-Environment,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/62&oldid=1285106" இலிருந்து மீள்விக்கப்பட்டது