பக்கம்:இல்லற நெறி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இல்லற நெறி


என்றும் இவை இரண்டும் பிணைந்து நிற்பவை என்றும் நம்புகின்றனர். சூழ்நிலையும் மரபுவழியும் ஒரு குழந்தையின் வாழ்வில் இடைவிடாது இடைவினை புரிகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்; ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அது சூழ்நிலையின் செல்வாக்கைப் பெறுகின்றது என்று எடுத்துக்காட்டுகின்றனர். ஜென்னிங்க்ஸ் என்ற உயி ரியலறிஞர் தமது "மானிட இயல்பின் உயிரியல் அடிப் படை' என்ற நூலில் மரபுவழியும் சூழ்நிலையும் ஒன்ருே டொன்று கலந்து உறவாடும் முறையைப்பற்றி மிகத் தெளி வாக விளக்கியுள்ளார். முடிவாக அவர் ஒரு குழந்தையின் அறிதிறன், நடத்தை, மீப்பண்பு, மனநிலை முதலியவை மரபுவழி அல்லது சூழ்நிலையால் மாற்றப்படும் தன்மையுடை யவை என்று கூறி முடிக்கின்ருர். கிட்டத்தட்ட சரியான மரபுவழியைப் பெற்றுள்ள ஒரு கரு இரட்டையரையும்?? தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு சூழ்நிலையில் வைப்போ மாயின் அவர்கள் மனவளர்ச்சி, ஆளுமை, சால்பு முதலிய வற்றில் சில மாறுபாடுகளைப் பெறுகின்றனர். சுருங்கக் கூறின், மரபுவழியையோ சூழ்நிலையையோ மாற்றி இரண்டு தனியாள்களிடையே கணிசமான வேறுபாடுகளை உண்டாக்கு தல் முடியும் என்பது இன்றைய உளவியல் காட்டும் உண்மையாகும்.

வளரும் ஒவ்வொர் உயிரியும்? -தாவரம், பிராணி, மனிதன் ஆகியவற்றுள் எதுவாயினும்-மரபுவழியும் சூழ் நிலையும் கலந்ததொன்று என்பதைத் தெளிவாக அறிய வேண்டுமாயின் ஒரு தாவரத்தின் வளர்ச்சியில் விரையின்

7 0: (E)GSL3Q33NrLyfl—Interact. 7.I. Jenninga:The Biologi a Basis of Human Nature 7 8. 69([5 #(5 @prl ..60 LILJño—Ídentical twins. 73. Frréol-1–Character;

74. a smooué-Psychology.

75, a uşiff–0rganism,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/64&oldid=1285107" இலிருந்து மீள்விக்கப்பட்டது