பக்கம்:இல்லற நெறி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இல்லற நெறி


னிற்கும், பெண்ணிடமிருந்து ஆணிற்கும் வருகின்றன: ஒவ் வொன்றையும் போக்குவதில் தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. வெள்ளையை மேகச்சூடு, வெட்டை என்ற பெயர் களாலும் வழங்குவர். இந்நோய் பாற்குறிகளையும் சிறுநீர் உறுப்புகளையும் பற்றித் தொல்லை தருவதாகும். இந் நோயின் கிருமிகள் குருதியினுள் புகுந்து உடலின் மற்றப் பகுதிகளைத் தாக்குதல் அரிது. இது மரபுவழியாகக் குழந்தை கட்கு இறங்கும் நோய் அன்று. ஆனால், பிறக்கும் குழவி இந்நோயினுல் பீடிக்கப்பெறலாம். குழந்தை பிறக்கும் பொழுது இந்நோய் அதனைப் பற்றுகின்றது. தாயின் கருப்பை வாயிலும் யோனிக்குழலிலும் இந்நோய்க் கிருமி கள் இருந்தால், குழந்தை பிறக்கும்பொழுது இந்நோய்க் ஒருமிகள் அதைப் பற்றுகின்றன. சாதாரணமாக, இந் நோய்க் கிருமிகள் குழந்தையின் கண்ணில் தங்கி அதில் விக்கம் ஏற்பட்டுக் குருட்டுத்தன்மையையும் உண்டாக்கி விடுகின்றன. ஆயினும், மருத்துவர் தாய் கருவுயிர்த்தவுடன் குழந்தையின் கண்களைக் கிருமி போக்கும் திரவத்தில்ை துடைத்துக் கண்ணைத் தூய்மையாக்கிவிடுகின்ருர். கரு வுயிர்க்கு ம்பொழுது வழக்கமாகச் செய்துவரும் இம்முறை யிஞல் பெற்றேரிடமிருந்து இந்நோய் குழந்தையிடம் பரவுவது தடுக்கப்பெறுகின்றது.

மேக நோய் என்பது மிகவும் கொடுமையான நோயா கும். இஃது குறிப்பிட்ட பகுதியை மட்டிலும் தாக்குவ தன்று. இஃது உடல் முழுவதையும் தாக்கும் கொடிய நோய், பொதுவாக இந்நோய் பிறப்புறுப்புகளில் அல்லது உடலின் வேறு பகுதிகளில் அழற்சியாகவோ புண்ணுகவோ தோன்றுகின்றது. ஆனால், விரைவில் அங்கிருந்து கிருமிகள் குருதி வட்டத்தினுள் புகுந்து உடலெங்கும் பரவுகின்றன. அவை உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தங்கி அங்கு அபாயகரமான விளைவுகளே உண்டாக்குதல் கூடும்: இந்நோய்த் தொற்றின் தோற்றம் காணப்பட்ட பல ஆண்டுகள் கழிந்தபிறகும் இவ்விளைவுகள் நேரிடலாம். தக்க இகிச்சை முறைகளை மேற்கொண்டு இந்நோயைப் போக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/70&oldid=1285110" இலிருந்து மீள்விக்கப்பட்டது