பக்கம்:இல்லற நெறி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 65

விடில் இது குழந்தைக்கும் பரவும். பெரும்பாலும் இது தாயின் நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு வரும். இந் நோயால் பீடிக்கப்பெற்ற தாய்மார்கட்கு அநேகமாகக் கருச் சிதைவு ஏற்படும்; ஏழு அல்லது பத்து கருச் சிதைவுகள் வரையிலும் கூட நேரிடலாம். இவர்கட்குக் குழந்தைகள் இறந்தும் பிறக்கும். இந்நோயினைத் தாங்கும் ஆற்றல் இளஞ்சூலுக்கு இருந்தால், குழந்தை நன்கு பிறந்துவிடும்: ஆனால், அதன் உடலில் இந்நோய் காணப்பெறும். இந் நோயும் பிறவி சார்ந்த நோயேயன்றி மரபுவழியாக வரும் நோய் அன்று.

இந் நோய்களால் பீடிக்கப்பெற்றவர்கள் இந் நோய் களைக் குணப்படுத்திக்கொள்ளாமல் திருமணம் புரிந்து கொள்ளுதல் கூடாது இந்நோய் பிறருக்குப் பரவாது என்று மருத்துவரின் உறுதிபெற்ற பின்னரே திருமணம் புரிந்துகொள்ள வேண்டும். இந் நோய்களைப் போக்குவதற் குப் பல அரிய முறைகளும் மருந்துகளும் அண்மைக் காலத் தில் கண்டறியப் பெற்றுள்ளன. "சல்பானிலமைடு", "பென்சிலின்', 'டெர்ராமவின் போன்ற அரிய மருந்து களால் வெள்ளை நோயை ஒரு வாரத்திற்குள் குணப்படுத்தி விடலாம்; நோயாளி இந் நோயினைப் பிறருக்குத் தொற்று வதினின்றும் தவிர்க்கப்பெறலாம். மேக நோயை விரைவில் குணப்படுத்த முடியாது. பல மாதங்கள் விடாது செய்யப் பெறும் சிகிச்சையில்ை இந்நோயினை முற்றிலும் போக்க லாம். இந் நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சையைத் தாமதமின்றித் தொடர்ந்து செய்தால், நிரந் தரமாகவே இந்நோயினைப் போக்கிவிடலாம். சில ஆண்டு களாவது இந்நோய் நோயாளியிடம் தலைக்காட்டாது இருந்த பிறகுதான், அவர் திருமணம் புரிந்துக்கொள்ள வேண்டும்; இந்நோயால் பீடிக்கப்பட்டவரை மிகக் கவனமாகக் கூர்ந்து ஆராயவேண்டும். மருத்துவர் உறுதியளித்த பின்னரே திருமணம்பற்றி நினைக்கவேண்டும்.

இ. நெ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/71&oldid=598892" இலிருந்து மீள்விக்கப்பட்டது