பக்கம்:இல்லற நெறி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இல்லற நெறி


அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன். நலன் தெரிவிக்க:

இதுகாறும் எழுதிய ஐந்து கடிதங்களில் திருமணம் புரிந்துகொள்வோர்-மணமக்களாகப்போவோர்-கவனிக்க வேண்டிய பொருத்தங்களைப்பற்றிய சில கருத்துகளைத் தெரிவித்தேன். மேலும் சில பொதுக்கருத்துகளே இக் கடிதத்தில் கூறுவேன்.

உறவினர்களிடையே திருமணம்: சிலர் நெருங்கிய உற வினர்களிடையே பெண் எடுக்கின்றனர்; மாப்பிள்ளை பார்க் இன்றனர். உறவுமுறை விட்டுப்போகக்கூடாது என்றே உற வினர்களுள் திருமணம் செய்து கொள்ளுகின்றனர். சிலர் பணத்தையும் படிப்பையும் கருதி அந்நியரிடம் திருமண உறவு கொள்ளுகின்றனர். சிலர் சாதிவிட்டு சாதியில் மண உறவு கொண்டால் ஒட்டுவகை மாம்பழங்கள் போல் சிறந்த குழவிகளைப் பெறலாம் என்றும், இக் குழவிகள் உடல் வன் மையிலும் அறிவாற்றலிலும் சிறப்பாக வளர்வர் என்றும் தம் செயலை ஒரு கொள்கைபோல் பேசுகின்றனர். அத்தை மகன், அத்தை மகள், மாமன்மகள், மாமன் மகன், அக்காள் மகள் போன்ற நெருங்கின உறவினர்களுக்குள் சம்பந்தம் செய்துகொண்டாலும் மரபுவழிச் சட்டங்கள் ஒரு மாதிரி யாகத்தான் செயல் புரிகின்றன. தாயும் தந்தையும் மிக நெருங்கிய உறவிர்களாக இருப்பின் குடும்பக் கூறுகள் தலைகாட்டும் தற்செயல் அதிகப்படுகின்றது. இத்தகைய சிறப்பியல்புகள் சிறப்பானவையாக இருந்தால் அவை குழவி கட்கு நன்மையே பயக்கும். ஆனால், இவை உடற்கூறுகளி லும் மனப்பண்புகளிலும் குறைபாடுடையனவாக இருப்பின் குழந்தைகள் வேண்டப்பெருத கூறுகளே மரபுவழியாகப் பெற நேரிடும். சில குடும்பங்களில் நெருங்கின சம்பந்தங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/74&oldid=1285112" இலிருந்து மீள்விக்கப்பட்டது