பக்கம்:இல்லற நெறி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 7I

வன்மையிலும் உளவளத்திலும் உயர்வுடையவர்களாக உள் ளனர். மற்றவர்கள் தாழ்வுடையவர்களாக இருக்கின்றனர்: உயர்ந்த வகையைச் சார்ந்தகுழுவினர் தம்முடைய உயர்ந்த தரநிலைகளிலுைம் முன்நோக்கிலுைம் தம்முடைய சந்ததியினரின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளு கின்றனர்; தாழ்ந்தவகையைச் சார்ந்த குழுவினர் மிக வேக மான அளவில் இனப்பெருக்கம் செய்கின்றனர். உயர்ந்த வகையினர் பல்வேறு சமூகச் சலுகைகளாலும் பிற உதவி களாலும் அதிகமாக இனப்பெருக்கம் செய்யத் துண்டப் பெறல் வேண்டும் என்றும், தாழ்ந்தவகையினருக்கு இன மேம்பாட்டியல்பற்றிய கல்வியை அளித்து இனப்பெருக் கத்தைக் குறைக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் இனமேம்பாட்டியலறிஞர்கள் கூறுகின்றனர்.

உயிரியல் அடிப்படை: மேற்கூறியவற்றிலிருந்து ஓர் உண்மை உனக்குப் புலகைலாம். இனமேம்பாட்டியலறிஞர் கள் உயிரியல் அடிப்படையில் மக்களைப் பாகுபாடு செய்யும் வரை அவர்களுடைய முடிவுகள் சரியாக இருக்கலாம்: இருக்கும். ஆனால், அவர்கள் பிறப்பினுலும் சாதியிலுைம் உயர்ந்தவர்கள் என்றும், தாழ் ந் த வர் க ள் என்றும், முற்போக்குச் சமூகத்தினர் என்றும், பிற்போக்குச் சமூகத் தினர் என்றும் பாகுபாடு செய்யத் துணிந்தால், அவர்க ளுடைய முறைகள் கண்டனத்துக்குள்ளாக நேரிடும். இன்றையநடைமுறைக்கு அது முற்றிலும் பொருந்தாமலும் போய்விடும். இன்றையசமூகத்தில் பெரும்பாலும் அத்தகைய வேறுபாடுகள் பொருளாதாரச் சமூக அடிப்படையிலேயே அமைந்திருப்பது கண்கூடு. இன்று உயர்ந்த பதலியிலுள்ள வர்கள் யாவரும் தம்முடைய இயல்பாக அமைந்த திறன் களில்ை அப்பதவிகளே அடைந்தனரா, அல்லது சாதகமான சூழ்நிலைக்கூறுகளின் காரணமாக (எடு. நல்ல கல்வி, § வாய்ப்புகள், சிறந்த உறவுகள் அல்லது தொடர்புகள் முதலியன) அப்பதவிகளை பெற்றனரா என்பதை உறுதி பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/77&oldid=598904" இலிருந்து மீள்விக்கப்பட்டது