பக்கம்:இல்லற நெறி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-2

அறிவியலடிப்படையில் திருமணம்

'அறிவியலடிப்படையில் திருமணம் என்ற இப்பகுதி ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்களையும், அவற்றின் செயல்களையும் ஒரளவு தெளிவாக விளக்குகின்றது. மானிட உடலில் இனப்பெருக்க உறுப்புகளடங்கிய மண்டலத்திற்கும் ஏனைய உறுப்புத் தொகுதிகட்கும் உள்ள வேற்றுமை வெளிப்படை. மானிட உயிரியிடம்" நரம்பு மண்டலத்தின் இணக்கத்தால் செயற்படும் உணவு மண்டலம் குருதியோட்ட மண்டலம், சுவாசிக்கும் மண் டலம், பிற மண்டலங்கள் ஆகியவற்றுடன் கூடிய மிகச் சிக்கலான உறுப்புகளடங்கிய தொகுதிகள் தனியாளேக் காப்பாற்றுவதில் பணியாறறுகின்றன; ஆனால், பிறப்புறுப்பு கள் அடங்கிய இனப்பெருக்க மண்டலம் இனப்பெருக் கத்தை வளர்ப்பதில் மட்டிலுந்தான் பணியாற்றுகின்றது.

ஆண் பிறப்புறுப்புகள் அடங்கிய தொகுதிக்கும் பெண் பிறப்புறுப்புகள் அடங்கிய தொகுதிக்கும் நெருங் கிய ஒற்றுமை நயம் காணப் பெறுகின்றது. இந்த ஒற் றுமை நயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் முறையில், அவை செயற்படும் அடிப்படையில், பிறப்புறுப்புகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

1: Lorahl a us—Human organism. 2. ஒற்றுமை நயம்-Analogy;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/79&oldid=598908" இலிருந்து மீள்விக்கப்பட்டது