பக்கம்:இல்லற நெறி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இல்லற நெறி


1. உயிரணுக்களை உற்பத்தி செய்யும் காமச் சுரப்பிக்கள்: ஆணிடம் இவை விரைகள் என்றும், பெண்ணிடம் இவை சூற்பைகள் என்றும் வழங்கப்பெறுகின்றன. பொதுவாக இவற்றை இன கோளங்கள் என்றும் வழங்குவர்.

2. இந்த உயிரணுக்களை உரிய இடங்களுக்கு அனுப்பிக் கருவுறு தலைச் சாத்தியப்படச் செய்யும் தூம்புகள்: ஆணிடம் விந்தேறு குழல், எபிடிடைமிஸ், விந்து பாய்ச்சும் தூம்பு, சிறுநீர்ப் புறவழி ஆகியவையும், பெண்ணிடம் கருக் குழலும் இங்ங்ணம் செயலைப் புரிகின்றன.

3. சருவுறுதலுக்காக விந்தணுக்களை முட்டையிடம் சேர்க்கும் இணக்கும் உறுப்புகள் : ஆணிடம் ஆண்குறியும் பெண்ணிடம் யோனிக் குழலும் இங்ஙனம் சேர்க்கும் பணி யைப் புரிகின்றன. கருப்பை கருவுற்ற முட்டையைத் தன் னிடம் இருத்திக் குழந்தையாக வளரும்வரை அதனைப் பாது காக்கின்றது.

இம் முறைப்படி ஆண் பிறப்புறுப்புகள் செயற்படு வதையும் அவற்றுடன் தொடர்புள்ள பிற செய்திகளையும், 'ஆண் உறுப்புகள்’ என்ற தலைப்பின்கீழ் மூன்று கடிதங் களிலும் (7 9) பெண் பிறப்புறுப்புகள் செயற்படுவதை யும் அவற்றுடன் தொடர்புள்ள செய்திகளையும் 'பெண் உறுப்புகள் என்ற தலைப்பின்கீழ் ஐந்து கடிதங்களிலும் ( 10-14) இப்பகு தி ஒரளவு தெளிவாக விளக்குகின்றது.

2-ußg ggg $3<sir–Germinal cells. siruoj #grú1936ừ–Sex glands. இன கோளங்கள்--Gonads. 37th Logir—Ducts,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/80&oldid=1285115" இலிருந்து மீள்விக்கப்பட்டது