பக்கம்:இல்லற நெறி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 75

ஆண் உறுப்புக்கள்

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன். நலனேயாகுக

சென்ற கடிதத்தில் உயிரியல் அடிப்படையில் திருமணத் தைப்பற்றிச் சில கருத்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட் டிருந்தேன் அல்லவா? மானிட் இனப்பெருக்க மண்டலத் தைப்பற்றிய கருத்துகளே இவ்வாராய்ச்சியாகும். அறி வியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் பட்டப் படிப்புவரைப் படிக்கும் மாளுக்கர்கட்கும் மானிட இனப் பெருக்க மண்டலத்தைப்பற்றிய கருத்துகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை; பாடத்திட்டத்தில் அப்பகுதி சேர்க்கப் பெறவும் இல்லை. பட்டப் படிப்புவரைப் படிக்கும் ஏனைய மாளுக்கர்கட்கும் மானிட உடலைப்பற்றிய சரியான கருத்துகளைப்புெற வாய்ப்பில்லை. பிற்குறிப்பிட்ட மாளுக் கர்களுள். நீ ஒருவன் என்பதை நான் அறிவேன். ஆகவே, நீ "மானிட உடல்' என்ற தலைப்பில் என்னல் எழுதப்பெற் றுள்ள நூலினை நன்முகப் படித்து அதன் அமைப்பினைத் தெளிவாக அறிந்து கொள்வாயாக; உன் துணைவியையும் படிக்குமாறு துரண்டுவாயாக.

திருமணம் புரிந்து கொள்ளப்போகும் ஒவ்வொரு நம்பி யும் நங்கையும் ஆண்-பெண் பிறப்புறுகளின் அமைப்பினை யும், அவை செயற்படும் முறையினையும், இனப்பெருக்கத்தின் இயல்பினையும் சரியாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

7 மானிட உடல் (புதுமைப் பதிப்பகம், காரைக்குடி: சென்னை-17.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/81&oldid=598914" இலிருந்து மீள்விக்கப்பட்டது