பக்கம்:இல்லற நெறி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இல்லற நெறி


எல்லா உறுப்புகளிலும் சிறந்தது பாலுறுப்பு ஆகும் என்பது உயிரியல் உண்மையாகும். எல்லா உறுப்புகட்கும் அஃது உயிர் போன்றதாதலின் அதனைப் பண்டையோர் "உயிர்நிலை என்று பெயர் சூட்டி அதன் நுட்பத்தைப் புலப் படுத்தினர். இந்த உயிர் நிலையின் நுட்பங்களைச் செவ்வனே ஆய்ந்து அதன் இயல்புகளை எவரும் உணரும் முறையில் அறிவுறுத்தியுள்ளனர் உயிரியல் அறிஞர்கள். திருமணத் திற்கு முன்னர் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இவற்றை நன்கு உணர வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

இனப்பெருக்கத்தில் ஆணின் பங்கு : ஆணின் பால் - உயிரணுக்களாகிய விந்தணுக்களும், பெண்ணின் பால் உயிரணுக்களாகிய முட்டைகளும் ஒன்ருகஇணைவதே இனப் பெருக்கத்தின் அடிப்படையாகும். எனவே, இனப்பெருக்கத் தைப் பொறுத்தமட்டிலும் பாலுறுப்புகளின் முதல்நிலைச் செயல் அந்தந்தப் பால் - உயிரணுக்களை உண்டாக்குவதே யாகும். எனினும், ஆணின் பங்கு இந்த உயிரணுக்களை உண்டாக்குவதுடன் நின்று போவதில்லை; அவ் உயிரணுக் களைப் பெண் உயிரணுக்களுடன் சேரக்கூடிய மிக நல்ல வாய்ப்புகள் தரக்கூடிய இடத்தில் கொண்டு செலுத்தும் பொறுப்பும் அவனிடம் இயற்கையில் அமைந்து கிடக்கின் றது. கீழ்நிலை உயிர்களுள் ஒரு சிலவற்றில் இப்பொறுப்பு அமையவில்லை. எடுத்துக்காட்டாக, சில கடல்வாழ்பிராணி களின் ஆணினமும் பெண்ணினமும் தாம் இனப்பெருக்கத் திற்கு ஆயத்தமாக இருக்கும்பொழுது தம்முடைய பால் உயிரணுக்களைக் கடல்நீரில் விட்டுவிடுகின்றன. இங்கு இரண்டு பாலினத்திற்கும் நேர்த் தொடர்பு இல்லை; விந்தணுக்களும் முட்டைகளும் சந்திக்கும் வாய்ப்பினத் தற்செயலே அறுதியிடுகின்றது. எனினும், மேல் நிலை உயி ரினங்கள் அனைத்திற்குமே ஆணின் பால் - உயிரணுக்கள் பெண்ணின் உடலருகிலோ உடலினுள்ளோ கொண்டு

8. பால்-உயிரணுக்கள்-Sex cells: 9. Limoi gyuli-Sex organ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/82&oldid=1285116" இலிருந்து மீள்விக்கப்பட்டது