பக்கம்:இல்லற நெறி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அறிவியலடிப்படையில் திருமணம்

செலுத்துவதற்கேற்றவாறு பிரத்தியேகமாக உறுப்புகள் அமைந்துள்ளன. இதல்ை அவை முட்டையணுக்களுடன் இணைவது முற்றிலும் உறுதியாகின்றது. மானிட இனத்தில் இந்த உயிரணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்புகளின் வழியில் உட்புறத்தில் முட்டையைச் சந்திக்கின்றன. எனவே ஆணின் பிறப்புறுப்புகளை' ஆராயுங்கால் விந்தனுக்களை உண்டாக்கும் உறுப்புகளையும், அவ்வணுக்களைப் பெண்ணி டம் கொண்டு சேர்க்க உதவும் உறுப்புகளையும் வேறு படுத்தி அறிந்துகொள்ள வேண்டும்.

ஆணின் இனப்பெருக்க மண்டலம் : இங்குள்ள படத் தைக் கூர்ந்து நோக்கி (படம்-6) ஆண் இனப்பெருக்க மண் டலத்தின் பொறிநுட்பத்தைத் தெளிவாக அறிந்துகொள் வாயாக. இடுப்பிற்குக் கீழ் அதாவது இடுப்பெலும்புக் குழியினுள் வயிற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்து கிடக்கும் உறுப்புகளின் பக்கவாட்டுத் தோற்றத்தைப் படம் காட்டு கின்றது. வெளிப்புறமாகவுள்ள பிறப்புறுப்புகளையும் இந்தப் படத்தில் காணலாம்.

படத்தின் வலப்பக்கத்தில் முதுகு எலும்புகள் கூராகச் சுருங்கிக் கீழாக வருவதைக் கவனித்திடுக. அந்த எலும்புக்கு அடுத்தது குடல்களின் அடிப்பகுதி, மலக்குடல் என்பது. அது மலவாய் மூலம் வெளித் தொடர்பு கொண்டுள்ளது: மலக்குடலுக்கு முன்னல் சிறுநீர்ப்பை அமைந்துள்ளது; சிறுநீரகங்களில்" (படத்தில் இப்பகுதி காட்டப்பெற வில்லை)சிறுநீர் உண்டாகின்றது. அவை வயிற்றின்மேற்பகுதி யில் பக்கத்திற்கு ஒன்ருக உள்ளன. ஒவ்வொரு நீரகமும் சிறு நீர்ப்பையுடன் சிறு நீர்க்குழல் எனப்படும் ஒரு மெல்லிய

10. 19 pisilj půl s ssir-Genital Organs. 11. Quiroll-outh—Mechanism. 12. இடுப்பெலும்புக்குழி-Pelvis. 13. udévqumrtii—Anus. 14: சிறுநீரகம்-Kidney: 15; சிறுநீர்க்குழல்-Ureter

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/83&oldid=598918" இலிருந்து மீள்விக்கப்பட்டது