பக்கம்:இல்லற நெறி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இல்லற நெறி


விரைகளிலிருந்தும் எடுத்து அளந்தால் அவை 5200 அடிக்கு மேல் நீளம் உள்ளவையாம்! கிட்டத்தட்ட ஒரு மைல் நீளம்!

விரைகளில் விந்தனுக்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பருவத்தில் உண்டாகின்றனவா, அல்லது தொடர்ந்து உற் பத்தியாகிக்கொண்டே இருக்கின்றனவா என்ற ஐயம் உன் பால் எழலாம்; கீழ்நிலை உயிர்ப் பிராணிகளிடம் விந்தனுக் கள் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில்தான்-ஆண்டில் ஒரு சில மாதங்களே-உற்பத்தியாகின்றன. ஏனைய மாதங்களில் இனப்பெருக்கத்தைப்பொறுத்தமட்டிலும் விரைகள்செயற் படுவதில்லை. எனினும், பெரும்பாலான உயிரினப் பிராணி களிடம் ஆண்டு முழுவதும் விந்தணுக்கள் உற்பத்தியாகிக் கொண்டேயுள்ளன. மனிதன் இந்த இனத்தைச் சேர்ந்தவ தைலின், அவனிடம் சதா இந்த உயிரணுக்கள் உற்பத்தி யாகின்றன. இதனுல்தான் மனிதன் கலவியை ஒரு கலையாக வளர்த்துவிட்டான என்று கருத வேண்டியுள்ளது! அது கிடக்க.

இந்த விரைகள் விந்தனுக்களை யுண்டாக்குவதுடன், வேறு ஒரு பிரத்தியேகமான ஹார்மேன்' என்ற சுரப்பு நீரினையும் உண்டாக்குகின்றது. இது விந்துவினின்றும் வேரு னது. இந்த நீர் குருதியினுள் நேராகக் கலக்கின்றது; இவ் வாறு கலப்பதனுல் தனியாளிடம்?? இது குறிப்பிடத்தக்க உடல், உள சிறப்பியல்புகளை விளைவிக்கின்றது. விந்தணுக் களும் ஹார்மோன்களும் விரைகளில் உண்டானபோதிலும் அவை அவற்றின் வெவ்வேறு பகுதிகளில் உண்டாகின்றன. இரண்டு டொருள்களும் தன்மையிலும் செயலிலும் முற்றி லும் வேறுபட்டவை.

விரைப்பைகள் சிலசமயம் விரைப்பை பெரிதாகவும் சில சமயம் சிறிதாகவும் காணப்படுகின்றதல்லவா? உண்மை யில் விரைகள் எப்பொழுதும் அளவில் பெரிதானவை அல்ல.

27. gomir Gusmér–Hormone 28, ĝøĥujm'sîr---Individual

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/88&oldid=1285119" இலிருந்து மீள்விக்கப்பட்டது