பக்கம்:இல்லற நெறி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 83

விரைப்பையே விரியவும் சுருங்கவும் செய்கின்றது. வெப்ப மான காலங்களில், அல்லது வெந்நீர்க் குளியலுக்குப் பிறகு, விரைப்பை நீண்டு கீழாக இறங்குகிற நிலையில் விரைகளைக் காணலாம். குளிர் காலங்களில், விரைப் பையின் தசைகள் சுருங்கி விரைப் பைகள் உடலின் அருகே மேல் நோக்கிக் கொணரப்படுகின்றன. இக் காரணங்களால்தாம் விரைகள் சில சமயம் பெரியனவாகவும் சில சமயம் சிறியனவாகவும் இருப்பனபோல் காணப்பெறுகின்றன: விரைகளைச் சரியான வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டியே இந்தப் பொறி யமைப்பு செயற்படுகின்றது. விரைகள் வெப்பத்தையும் குளிரையும் மிக நுட்பமாக உணரக்கூடியனவாதலின், அவை சுற்றுப்புற மாற்றங்களுக்கேற்பப் பாதுகாக்கப் பெறல் வேண்டும்; இப் பாதுகாப்பை இயற்கை செய்கின்றது, விரைப்பையின் வெப்பநிலை நம்முடைய உடலின் உள்வெப்ப நிலையைவிட சில சுழிகள் 29 குறைவாகவேவுள்ளன. விரைகள் சரிவரச் செயற்படுவதற்கு இந்த வெப்பநிலை மிகவும் இன்றி யமையாதது. ஒருவித முயல்களின் விரைப்பைகளின் வெளிப் புறத்தில் பதினைந்து நிமிடநேரம் வெப்பத்தினைக் காட்டுவத ஞல் விரைகள் விந்தனுக்களை உண்டாக்கும் செயலுக்குத் தீங்குநேரிடுகின்றது என்றும், இது மலட்டுத்தன்மையையே உண்டாக்கக் கூடுமென்றும் மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது.

சில சமயம் ஒரு சில குழவிகளிடம் ஒரு விரை அல்லது இரண்டு விரைகளும் காணப்பெரு திருக்கலாம். இந்நிலை ஐந்நூறில் ஒருவருக்கு நிகழலாம். இளஞ்சூல் நிலையில் குழந் தையின் விரைகள் அதன் வயிற்றுக் குழியில் உள்ளன, ஆனல், குழந்தை பிறப்பதற்கு முன்னர் அவை தொடிை களுக்கிடையிலுள்ள ஒரு குழலின் மூலம் இறங்கி விரைப் பையில் தங்குகின்றன. சிலரிடம் ஒன்று அல்லது இரண்டு விரைகளும் கீழிறங்கத் தவறுகின்றன; அவை வயிற்றில்

89. Afyogāt-Degrees 30. மலட்டுத் தன்மை-sterility

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/89&oldid=598930" இலிருந்து மீள்விக்கப்பட்டது