பக்கம்:இல்லற நெறி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இல்லற நெறி


தங்கலாம்; அல்லது தொடைகளுக்கிடையிலும் தங்கிவிட லாம். இந்நிலையை இறங்கா விரைகள்' என்று வழங்குவர். இளமைப் பருவத்தில் உடலின் அதிக வளர்ச்சியின் காரண மாக விரைகள் தாமாகவே கீழிறங்கி விடும்; சில சமயம் அறுவை முறைகளைக் கையாண்டு அவற்றைக் கீழிறக்கவும் நேரிடலாம். அடித்தலைச் சுரப்பி நீர்தான் இவ் விரைகள் கீழிறங்குவதற்குக்காரணம் என்று அண்மைக்கால ஆராய்ச்சி யால் கண்டறியப் பெற்றுள்ளது. ஆகவே, ஒரு குழவியின் இளமைப் பருவத்திலேயே இந்தச் சுரப்பிநீரைக் குழந்தை யிடம் செலுத்தி விரைகளைக் கீழிறங்கச் செய்தல் இன்று சாத்தியமாகின்றது.

குமரப் பருவத்திற்குப் பின்னரும்-அஃதாவது விரகறி யும் பருவத்திலும்??-விரைகள் கீழிறங்கா நிலையிலிருப்பின் அவை ஊட்டமின்றி மரித்து விந்தனுக்கள் உண்டாகும் திற னின்றிப் போகலாம். எனவே, இரு புற மும் விரைகள் இறங்கா நிலையில் ஒருவர் மலட்டுத் தன்மை யுடையவராகப் போதற்கு ஏதுவுண்டு. எனினும், விரையினுள் சுரப்பு நீர் உண்டாவது பாதிக்கப்பெறுவதில்லை. ஆகவே, இச் சுரப்பு நீரால் கட்டுப்படுத்தப் பெறும் ஒருவருடைய உடல், உளச் சிறப்புயல்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பெருது சாதாரண நிலையிலேயே உள்ளது; விரைகள் இறங்கா நிலையிலுள்ள ஆண்கள் உடல்நிலையிலும் புணர்ச்சித் திறனிலும் சாதாரண நிலையிலிருக்கின்றனர்; ஆனல் அவர்களின் விந்துவில் விந்த ணுக்களே இரா. ஆயினும், இனப்பெருக்கச் செயலுக்கு ஒரு விரை இறங்கியிருந்தாலும் போதுமானது. எனவே, ஒரு விரை இறங்கா நிலையிலுள்ள ஒருவரது இனப் பெருக்கத் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப் பெறுவதில்லை.

விந்தனுக்கள் வரும் வழி : விரைகளிலுண்டாகும் விந் தணுக்கள் ஆண் குறியை நோக்கி வரும் வழியைப்பற்றியும்

31. GADĒism østsing G6ir–Uudescended testes 32. விரகறியும் பருவம்-Puberty

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/90&oldid=1285120" இலிருந்து மீள்விக்கப்பட்டது