பக்கம்:இல்லற நெறி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இல்லற நெறி


னேன் அல்லவா? இந்தச் சிறு குழல்கள் படிப்படியாக ஒருங் கிணைந்து விரைகளின் ஒரு பக்கமாகக் கிளம்பி வருகின்றன. இவ்வாறு பல சிறு குழல்கள் ஒன்று சேர்ந்து இணைந்த உறுப்பே 'எபிடிடைமிஸ்" என்பது. இந்த உறுப்பில்தான் விந்தணுக்கள் முழு வளர்ச்சியைப் பெறுகின்றன. இந்த உறுப்பு விரைகளையொட்டி நீளவாக்கில் இருப்பதுடன் அவற் துடன் நெருங்கி ஒட்டிக் .ெ கா எண் டு மு ள் ளது. இந்த உறுப்பு வளைந்து சுருண்ட குழல்களாலானது. இது கிட்டத் தட்ட இரண்டு.அங்குல நீளமும் கால் அங்குல அகலமுமுடைய தாக இருப்பினும், இதனுள் அமைந்துள்ள குழல் மிக நீண்ட தாகும்; இவ்வுறுப்பினைப் பிரித்து அதன் குழலை நீட்டினுல் அது கிட்டத்தட்ட 20 அடிவரை இருக்கும்! இதுவும்மானிட உடலின் ஒரு வியத்தகு அமைப்பாகும். இக் குழலின் குறுக் களவு ; அங்குலம்தான் உள்ளது; அஃதாவது கிட்டத் தட்ட கதர் நூல் அளவுதான் கனமாக இருக்கும். எபிடி டைமிஸின் கீழ்நுனி விந்தேறுகுழல்' எனப்படும் சற்று ஒரு பெரிய குழலுடன் இணைகின்றது. இதைப் படம் 9-இல் கண்டு அறிக:

விந்தேறு குழல் விரைப் பையில் மேல்நோக்கி வளைந்து செல்வதைக் கவனி. இஃது ஒரு குழல்மூலம் தொடைகளுக் கிடையில் சென்று வயிற்றின் கீழ்ப் பகுதியினுள் நுழைகின் றது. இங்கு இது மறுபடியும் கீழ் நோக்கித் திரும்பி இறுதி யாக சிறு நீர்ப் புறவழியின் பின் புறத்தில் திறக்கின்றது: இது புராஸ்டேட் சுரப்பியைத் துளைத்துக்கொண்டு செல்வ தற்கு முன்பு அஃது ஒரு பையாக விரிந்திருப்பதைப் படம் 9-இல் காண்பாயாக. இதில் விந்தின் ஒரு பகுதி தேக்கத்தில் தங்குவதுபோல் நிறுத்தி வைக்கப்பெறுகின்றது. இக் குழ லின் நீளம் கிட்டத்தட்ட் 16 அங்குலம்; குறுக்களவு கிட்டத் தட்ட அங்குலம்: விந்தேறு குழல் சற்றுத்தடித்திருத்தலின் அது விரைப் பையிலிருந்து தொடைகளுக்கிடையில் செல்லு வதை விரல்களால் தொட்டு அறியலாம். எனவே, இந்த மிக

33; orious sol-lāsī-Epididymis

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/92&oldid=1285121" இலிருந்து மீள்விக்கப்பட்டது