பக்கம்:இல்லற நெறி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 8ፇ

நீண்ட வழியாக விந்தணுக்கள் பிரயாணம்செய்து வெளிவர வேண்டும் என்பதை அறிவாயாக. இந்த நீண்ட வழியில்எபிடி ைடமிலிலோ அல்லதுவிந்தேறுகுழலிலோ-யாதேனும் தடைஏற்பட்டுக்குழல் அடைத்துக்கொள்ளுமாகில்விந்தனுக் கள் அந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் வெளி வரமுடியா இரண்டு பக்கங்களிலும் உள்ள விந்தேறு குழல்களில் இத் தடை ஏற்படின், ஆண் மலடாகி விடுவான். சாதாரண மாகத் தீங்கினுலும் அல்லது நோயினுலுமே இத்தடை நிகழ் கின்றது. வெள்ளை நோயின் காரணமாக அடிக்கடி இக்குழல் களில் வீக்கம் ஏற்பட்டுக் குழவின் துவாரமே அடைத்துக் கொள்ள நேரிடும். இந்த நிலையிலும் புணர்ச்சியின்போது விந்து வெளிப்படுகின்றது. இது புராஸ்டேட் சுரப்பியிலும் விந்துப் பைகளினின்றும் வெளி வருகின்றது. இந்த இரண்டு உறுப்புகளும் விந்தேறு குழல்களில் ஏற்படும் அடைப்பில்ை பாதிக்கப் பெறுவதில்லை.

விந்துப் பைகள்: விந்துப் பைகள் என்பவை சிறு நீர்ப் பையின் பின்புறத்தின் அடிப்பக்கத்தில்-பக்கத்திற்கொன்ருக அமைந்துள்ள பழங்காலத் துருத்திகள் போன்ற உறுப்பு களாகும். அவை ஒரு பிரத்தியேகமானதுரம்பினுல் 'விந்தேறு குழலுடன் இணைகின்றன. இதனைப் படம்-9இல் கண்டு அறிக. இவை பசை போன்ற சற்று மஞ்சள் நிறமுள்ள சுரப்பு நீரினை உண்டாக்குகின்றன. இந்த நீர் விந்தனுக் களுடன் சேர்ந்து விந்துப் பாய்மத்தைச் சற்றுக் கெட்டி யாக்கி அதன் அளவினையும் அதிகரிக்கச் செய்கின்றது. இந் நீரில் ஃபிரக்டோஸ்-38என்ற பிரத்தியேகமான சருக்கரை அடங்கியுள்ளது; இச்சருக்கரை விந்தணுக்களின் ஊட்டத் திற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கின்றது.

புராஸ்டேட் சுரப்பி: புராஸ்டேட் சுரப்பி என்பது சிறு நீர்ப் பையின் அடிப்பக்கத்தில் மலக் குடலுக்கு முன்புற மாகச் சிறுநீர் புறவழியைச் சுற்றிலும் அமைந்துள்ள ஒர்

34. Grubl]-Duct: 353 «?jgù turrtùlaub—Seminai f|uid. 36. logr#GL-fr.sid-Fructosę.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/93&oldid=598940" இலிருந்து மீள்விக்கப்பட்டது