பக்கம்:இல்லற நெறி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 9i

8

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன், நலன் தெரிவிக்க

புணர்ச்சியின்பொழுது வெளிப்படும் விந்துவைப் பெண் ளிைன் பிறப்புறுகளில் பாய்ச்சுவதற்குத் துணையாக இருப்பது ஆண் குறியாகும்; இதுவே ஆணையும் பெண்ணையும் இன விழைச்சின் பொழுது இணைத்து நிற்கும் இணைப்புறுப்பாகும்: ஆண்குறியின்உடற்கூற்று அமைப்பினைப்படத்தில் (படம்-10) காண்க. ஆண் குறியினுள் அமைந்துள்ள சிறுநீர்ப் புறவழி யின் பின்புறமாகத்தான் விந்துவின் பல்வேறு சுரப்புநீர்கள் ஒன்று சேர்கின்றன:

ஆண் குறி: ஆண் குறியை அடிப்பகுதி, நடுப்பகுதி, துணிப் பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். நடுப் 'குதி நீளமாகவும் மெல்லியதாகவும் உள்ளது. அடிப்பகுதி மிக ஆழமாக அடி வயிற்றில் புதைந்துள்ளது; இப்பகுதி

படம்-10: ஆண் உறுப்பின் அமைப்பினை விளக்குவது

இடுப்பெலும்புக் குழியினுள் அமைந்திருக்கின்றது. இங்குத் தான் சிறுநீர்ப் புறவழிக் குமிழும் கெளபர் சுரப்பியும்

41: gafig @ so-Penis; 42. சிறுநீர்ப் புறவழிக் குமிழ்-Urethral bult;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/97&oldid=598948" இலிருந்து மீள்விக்கப்பட்டது