உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

அன்று; மனிதன் நிலைமை இதனினும் உயர்ந்து ஓங்கி நிலைக்க வேண்டும் அல்லவா?

மாந்தன் மற்றை உயிர்களைத் துன்புறுத்தாததுடன், அவற்றை அருளுடன் நோக்கவும் காக்கவும் முனைந்துவிட்டால் போர் உண்டா? போட்டி உண்டா? தாக்குதல் உண்டா? தவிப்பு உண்டா? எவையும் இல்லை! இவ் வுண்மையை வள்ளுவர் ஆய்ந்து எழுதினார். புத்தர் உணர்ந்து நடந்தார்; காந்தியடிகள் இவ்வுணர்விலே ஊன்றினார். இந்த ஒன்றையே உயிர்க் கொள்கையாகக் கொண்டு உலகில் நிலைத்தார்.

ஆம்! வள்ளுவர் கண்ட அருட்கொள்கையே - துன்புறுத்தாக் கொள்கையே - அண்ணல் காந்தி மூச்சு ஆயிற்று!

அவர் பெற்ற வெற்றியனைத்தும் அருள் வெற்றியே! தனக்கென்றே வாழ்வது கீழ்மை!

தனக்கும் பிறருக்கும் என வாழ்வது பொதுநிலை!

பிறருக்கு - பிறவுயிர்களுக்கு - எனவே வாழ்வது பெருமை!

பெருமைக் குரியவற்றைப் பேணுபவர் பெரியர்!

“மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை,"