156
இளங்குமரனார் தமிழ்வளம் – 9
"புல்லைக் கண்டு பின்பற்றிச் செல்லும் மாடுபோலப் பின்பற்றிச் செல்லுவேன் எனக்கு நூல் தேடித் தருபவர்களைத் தேடி" என்கிறார் கிரேக்க நாட்டு ஞானி சாக்ரடீசு!
"நடுத்தெருவிலே நிறுத்தி ஞாயிறுதோறும் கசைகளால் அடிப்போம்; காறியுமிழ்வோம் அவ்வளவும் பெற்றுக் கொண் டால்தான் நீ படிக்க முடியும் என்று ஒரு விதி ஏற்பட்டால் கூட தண்டனைக்கும் இழிவுக்கும் அஞ்சிப் படிப்பதை விடமாட்டேன்" என்றார் உலக மேதை கார்ல்மார்க்சு.
ஓய்வு ஒழிவு இன்றி விடுதலைத் தொண்டில் ஈடுபட்டிருந்த அருட் பெரியார் காந்தியடிகள் பகவத் கீதை வரிகளை எழுதிச் சுவரில் ஒட்டிவைத்து, அதைப் பார்த்து மனனம் செய்து கொண்டே பல் விளக்கினார்! இவ்வாறு நூற் காதல் கொண்ட வர்கள் ஏராளம் பேர்! இக் காதல் ஒன்றே நூல் மாண்பினையும், பயனையும் காட்டாவோ?
உலக மொழிகளோ ஆயிரம் ஆயிரம்! ஒவ்வொரு மொழியும் கொண்டுள நூல்களோ பல்லாயிரம் பல்லாயிரம்! அவற்றின் அறக் கருத்துக்களோ பல் கோடி! பல்கோடி! அற்ப வாழ்வுடைய மாந்தர், தம் வாழ்நாட்களுள் முற்றும் முடியக் கற்றுத் தெளிவு கொள்ளமுடியுமோ? எனின் முடியாது என்பதே விடை! இவ்வாறாயின் நூற்களின் முடிந்த முடிவினை அறியாமலே சிலர் வாழ்நாளை முடித்துச் சென்றுவிடக் கூடுமே, அல்லது நூற் கருத்தை நுனித்தறியும் நுண்ணிய அறிவு வாய்க்காது போகக் கூடுமே, இத்தகையர் நிலை இரங்கத் தக்கது அன்றோ! இவர்கட்கு எவ்வாறு நூலின் முடிவு காட்டுவது?
இவ்வினாவை ஏனையோர்களிடம் கேட்டுத்திரிந்து பொழுதை வீணாக்குவதினும் வள்ளுவப் பெருந்தகையினிடம் சென்று வினவின் வாய்த்த விடை தருகின்றார். என்ன விடை தருகின்றார்?
66
"தன்னிடம் உள்ள பொருளைப் பகுத்துக்கொடுத்துத் தானும் உண்டு பிற உயிர்களைக் காத்தல் வேண்டும். இதுவே அற நூலோர்கள் தொகுத்துரைத்துள்ள அறங்கள் அனைத் தினும் தலையாய அறமாம்!"
‘பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பும்' ஒன்று அறத்தலைமை பெறத் தகுமா? தகும் என்பது தகும்!
எப்பொழுது ஒருவன் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர் களையும் பேணும் அளவினும், உலகத் துயிர்களையெல்லாம் பேணும் அளவுக்கு உள்ளம் விரிந்து விட்டானோ அவன் வேறு