பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அ.ச. ஞானசம்பந்தன் "முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்” (195) என்று விளித்துப் பேசுவதும், “கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறுஉம் பெண்டிரும் உண்டுகொல்” என்றும், சான்றோரும் உண்டுகொல்” என்றும் விளித்துப் பேசுவதும் கொஞ்சம் வியப்பை அளிக்கின்றன: பண்பாடே வடிவமாகக் காட்சியளித்த கண்னகியா இங்ங்ணம் பேசுகின்றார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவரே கூறகின்றபபடி, பட்டேன்படாததொரு துயரம்'என்றே வைத்துக் கொண்டாலும், தனிப்பட்ட தனக்கு நேர்ந்த அவலம் காரணமாக, ஒரு நாட்டையே, மக்களையே இழித்துப் பேசுவது முறையோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தனிப்பட்ட தன்துயரத்தை மிகப் பெரிதாகக்கொண்டு அதனால் உலகம் முழுவதையும் தவறுடையதாகக் கருதும் ஒர் அவல மன நிலையையே இங்குக் காண்கிறோம். இந் நிலையில் அந்த அகங்காரம் ஒரளவு வலுப்பெறுகின்றது. இது காரணமாகத்தான் போலும், காவிரிப்பூம் பட்டினத்தில் தாமரையில் வாழும் இலக்குமியாகவும், வேடர்கள் வாழும் காட்டில் தென்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்தாகவும், உலகிற்கு ஒரு திருமாமணியாகவும் காட்சியளித்த அதே பெருமாட்டி, பாண்டியன் வாயிலில், அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தல்ைப் பீட மேறிய மடக்கொடி’ ஆகவும், - "வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை” ஆகவும், "அறுவர்க் கிளைய நங்கை யிறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு”