பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அ.ச. ஞானசம்பந்தன் வேண்டிய பொறுப்புத் தம்முடையதென்று கூறிக் கொண்டிருந்த பெருமாட்டிக்கு ஒரு புதிய அதிர்ச்சி ஏற்பட்டதுபோலும்! மதுரையை நானே அழிப்பேன் என்று தொடங்கிய அத் தேவியின் முன்னர், அவ்வாறு அழியவேண்டிய நியதி பண்டே ஏற்பட்டுள்ளதென்று அக்கினித் தெய்வம் கூறியது, தம் சக்தியை ஒரளவு விரித்துக் கண்ட கண்ணகியாருக்கு எதிர்மறையாக அமையக் காண்கிறோம். அக்கினிக் கடவுளின் கூற்றால் ஒருண்மை புலப்பட்டேதிரும். அதாவது : மதுரை எரியுண்டது என்றால் அது மாயத்தினியால் அன்று அவர் ஒரு துணைக் காரணமாக அமைந்தாரேயன்றி முதற் காரணமல்லர் என்பதே அது. எனவே, துணைக் காரணமாகி நிற்கின்ற அவர் தம்மை முதற்காரணம் என்று நினைத்து "மதுரையை அரசோடு ஒழிப்பென்” என்று கூறியது, ஒரளவு பொருத்தமிலாக் கூற்று என்பதை நாமே அறிய முடிகிறதாதலின், இதனை, அப் பெரு மாட்டி எளிதில் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இதனையடுத்து, மதுராபதித் தெய்வம், ஒரு முலை குறைத்த திருமா பத்தினியின் பின்னர் வந்து ‘கேட்டிசின் வாழி நங்கை என் குறை” (23:17) என்று பேசும்பொழுது வழக்குரைத்த குழ்நிலையிலோ அன்றி அழற்படுத்த சூழ்நிலை யிலோ உள்ள கண்ணகியை நாம் காணவில்லை. அதன் எதிராக, அடக்கமே உருவான பழைய கண்ணகியை, ஒரளவு அவலம் நிறைந்த துயரம் நிறைந்த கண்ணகியைக் காண் கின்றோம். ஆதலால்தான் என்பின்னர் வருகின்ற நியார்? என் துயரத்தை அறிவையோ?” என்ற பொருளில், “வாட்டிய திருமுகம் வலவயின் கோட்டி, யாரைநீ, என்பின் வருவோய்? என்னுடை ஆர்அஞர் எவ்வம் அறிதியோ? (23:20)