பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அ.ச. ஞானசம்பந்தன் மதுராபதித் தெய்வமும் மிக நுண்மையான முறையில் அறிவு கொளுத்தியவுடன், அந்த ஆணவமலமும் நீங்கப் பெற்றுச் சுடர்விடும் பொன்னாக ஆகிவிடுகிறார். முன்னர்க் கூறியபடி, அகங்காரம் முற்றிலும் மறையும் பொழுது, உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணும் நற்காட்சி விரிகின்றது. அதன் பயனாகப் போலும், அரசை ஒழிப்பேன்’ என்று கூறிய அதே கண்ணகியார், கடவுட் கோலம் கொண்டு 'தென்னவன் தீது இலன், தேவர்கோன்தன்கோயில் நல்விருந்தா யினான்; நான் அவன்தன் மகள்” (29:10) என்று பேசக் கேட்கின்றோம். ஆணவ மலத்தால் கட்டுண்டிருந்தகாலை, மன்னவனும் கோநகரும் தவறு இழைத்ததாகவும், தாம் தவறு இழைக்கப் பெற்றதாகவும் கருதி, தவறு இழைத்த அவர்கள் இருவருக்கும், தவறு இழைக்கப் பெற்ற தாம் தண்டனை தருவது முறையே என்றும் கூறிய அதே கண்ணகியார், அந்தக் குற்றம் நீங்கியவுடன் தென்னவன்மாட்டும் மதுரைமாட்டும் திதில்லை என்பதைக் காண்கின்றார். கோயில் வாயிலில் வளையலை உடைத்துவிட்டு கொடிமாடச் செங்குன்று வரை தான்மட்டும் தனியே செல்கிறார் கண்ணகியார் இந்த இடைக் காலத்தில் அவருடைய அகங்காரம் முற்றிலுமாக மறைந்து விட்டது என்பதை அடிகள் எடுத்துக் காட்டுகிறார். தீ வினை யாட்டியேன்” என்ற சொல் அகங்காரம் உடையார் வாயில் வருதற்கில்லை. எனவே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்துவிட்ட அவர் திருமாயத்தினி என்பதையும் அடிகள் காட்டுகிறார். இவ்வளவு நடைபெற்ற நிலையில் அவர் கணவனோடு வானவூர்தி ஏறிச் செல்லும் தகுதியைப் பெற்று விட்டார் என்பதில் ஐயமில்லை என்றாலும் இளங்கோவின்