பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அ.ச. ஞானசம்பந்தன் கடை நடத்தும் சிறுவணிகர் என்று நினைத்துவிட வேண்டாம். கண்ணகியின் தந்தையும், காரைக்கால் அம்மையின் தந்தையும் கடல் வாணிபம் செய்த பெருவணிகர்கள் ஆவர். சங்கப் பாடலில் வரும் நல்கூர்ந்தார் செல்வமகள் (கலி) என்ற அடி இவர்கள் இருவரையும் நினைக்கும்போது நம் மனக்கண்முன் வருகின்றது. பெருஞ் செல்வராயினும், மக்கட் செல்வத்தில் வறுமை உடையவர்கள். அதாவது ஒரே குழந்தையை உடையவர்கள் என்பது பொருள். இவர்கள் இருவருமே தம் தாய் தந்தையர்க்கு ஒரே பெண்ணாகப் பிறந்தவர்கள். கண்ணகி காவிரிப்பூம் பட்டினத்திலும், புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) காரைக் காலிலும் தோன்றியவர் ஆவர். இரண்டுமே தமிழகத்துள் கடல் வாணிபத்திற்குப் பெயர்போன நகரங்களாகும். பிறப்பு முதலிய வற்றால் ஒற்றுமை உடைய இவர்கள் வரலாற்றில் திருமணத் திலும் ஒர் ஒற்றுமையைக் காண்கிறோம். பெருஞ்செல்வர்களுடைய பெண்களுக்குத் திருமணம் செய்யும் போது அவர்களுடைய விருப்பபுவெறுப்புகளை யாரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. மனப்பருவம் வரையில் தந்தை வீட்டில் வளருகிறார்கள். இவர்களுடைய இயல் புகள், பழக்கவழக்கங்கள், பண்புகள், விருப்பு வெறுப்புகள், குறிக்கோள்கள் என்பன பற்றி யாருமே ஆராய்ந்ததாகவோ, சிந்தித்ததாகவோ தெரியவில்லை. தம்முடைய பெண்ணின் மனநிலைக்கும். பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ற மணாளனா இவன் என்று சிந்தித்ததாகவே தெரியவில்லை. தங்கள் செல்வ நிலைக்கேற்ற செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்களையே மணவாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். கண்ணகியின் திருமணமும் புனிதவதியின் திருமணமும் இவ்வாறுதான் நடைபெற்றன என்று இளங்கோவும், சேக்கிழாரும் குறிப்பாக அறிவிக்கின்றனர். கண்ணகியின் திருமணத்தைக் கூறும்போது மாநகர்க்கு ஈந்தார் மனம் (சிலம்பு மங்கல. 44)