பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 109 இடத்தில் சற்று ஆய்வது பொருத்தமுடையதாகும். நாடக பாணியில் சிலம்பு அமைக்கப்பட்டதாகலின் அவள் திருமணம் வரையில் வளர்ந்த முறை விரிவாகப் பேசப்படவில்லை. கண்ணகியை அறிமுகப் படுத்தும் இளங்கோ, போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறம் இவள் திறபொன்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள்மன்னோ (சிலம்பு, மங்கல 26-29) என்ற முறையில் பாடுகிறார். இப்பாடலின் முதலடி கண்ணகியின் பேரழகை விளக்குகிறது. பல்வேறு இடங் களிலும் வாழ் திருமகள் அந்தந்த இடத்திற்கேற்ப வடிவுபெறுதல் இயற்கை ஆனால் தாமரை என்பது அவள் இயல்பாக அமைதி யுடன் தங்கி இருக்கும் வீடாகும். எனவேதான் போதிலார் திருவினாள் வடிவு' என்று பேசுகிறார் அடிகள், இயல்பான இடத்தில் அமைதியாக இருக்கும் பொழுது ஒருவருடைய முழு அழகும் வெளிப்படும். இரண்டாவது அடியில் கண்ணகியின் மனத்திண்மை, கற்புநிலை பேசப்படுகிறது. அருந்ததி போன்ற கற்புடையவள் இவள் என்றுதான் வாலாயமாகக் கவிஞர்கள் வருணிப்பது வழக்கம். ஆனால், அடிகள் இதனை மாற்றி அமைக்கிறார். அருந்ததியின் கற்பு எத்தகையது தெரியுமா? கண்ணகியின் கற்பைப் போன்றது என்று உவமையையும் பொருளையும் மாற்றியமைப்பதால் கண்ணகிக்கு ஒரு மாபெரும் சிறப்பைச் செய்கிறார். இதில் மற்றொரு சிறப்பையும் காண். கிறோம். கண்ணகியின் வடிவழகு மனத்திண்மை என்பது பற்றி யார் பேசுகிறார் தெரியுமா? புகார் நகரத்து மாதரார் பேசு கின்றனர். இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன? உலகியல் முறையில் எந்தவொரு பெண்ணின் அழகையும் கற்பையும் மற்றொரு பெண் அல்லது பெண்கள் மனமுவந்து பாராட்டு வார்கள் என்பது இயலாத காரியம். பெண்களின் மனநிலை