பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 113 கண்ணகியும் இவ்வாழ்வில் ஈடுபட்டு சில ஆண்டுகள் அவ் வாழ்வில் இருந்தபடியே வீடுபேற்றை அடைந்தனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இல்வாழ்க்கை என்பது ஆன்ம முன்னேற்றத்துக்குத் தடை என்று பேசுகிற பிறநாட்டுக் கொள்கை தமிழர்களைப் பொறுத்தமட்டில் என்றுமே ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. இல்வாழ்வில் ஈடுபட்டிருந்த கண்ணகி, அம்மையார் ஆகிய இருவருக்கும் அவர்கள் விரும்பாமலே அதைத் துறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதிலும் ஒரு புதுமை என்ன வென்றால், கணவன் உயிருடன் இருக்கும்பொழுதே இல்வாழ்வைத் துறக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. கண்ணகியைப் பொறுத்த வரை, மனைவியின் அருமை தெரி யாமல் பிரிகிறான் கோவலன், தன்னுடைய பிரிவு அவளை எவ்வளவு தூரம் துன்புறுத்தும் என்பது பற்றி அவன் சிந்தித்த தாகவே தெரியவில்லை. கோவலன் பிறர் துயரத்தைக் கண்டு கொள்ள மறுக்கும் கீழ்மகன் அல்லன், மாதவியுடன் வாழ்கின்ற காலத்தில் ஒரு கிழட்டு வேதியனைக் காப்பாற்ற வேண்டி யானையின் துதிக்கையில் புகுந்து அந்த யானையை அடக்கிய வன். ஒரு பார்ப்பனியின் துயரைப் போக்க வேண்டி பெருஞ் செல்வத்தைத் தந்தவன். கயவன் ஒருவனைக் காப்பாற்ற வேண்டி சதுக்கபூதத்தினிடம் தன்னையே ஒப்படைக்க முனைந்தவன் அப்பூதமோ, நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும் பண்பிங் கில்லை . - s - (சிலம்பு. அடைக்கலம் 84 85) என்று கூறும்பொழுது, கோவலனை நல்லுயிர் என்று குறிப்பிடுவதைக் காணலாம். இவ்வளவு பண்புடையவனும் பிறர்துயர் துடைக்க முந்துபவனும் ஆகிய கோவலன் எவ்வாறு கண்ணகியின் துயரத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தான்?