பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அச. ஞானசம்பந்தன் ஆழ்ந்து சிந்தித்தால் மனவியலார் தத்துவப்படி இதற்கொரு காரணத்தைச் சொல்லமுடியும், சிறந்த கலைஞனுக்குத் தான்' என்ற முனைப்பு சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, எந்தச் குழ்நிலையிலும், எந்த நிகழ்ச்சியிலும், எந்த சந்தர்ப்பத்திலும் அவனுடைய தனித் தன்மை தலைதூக்கி நிற்கவேண்டும். அவன் செய்த உபகாரங்கள் அனைத்திலும், அவன் உபகாரம் செய்பவனாகவும், ஏனையோர் அவன்கீழ் நின்று உபகாரத்தைப் பெறுபவர்களாகவும் இருக்கின்றார்கள். அந்தக் கலைஞனின் தன்னலமற்ற உபகார சிந்தையில் கூட தான்' என்பது தலைதூக்கி நிற்கும். இவ்வாறு கூறுவதால் அவன் அகங்காரம் கொண்டவன் என்றோ தருக்கித் திரிபவன் என்றோ தவறாக நினைத்துவிடக் கூடாது. கலைஞர்களுக்கே உள்ள இயல்பான முனைப்பாகும் அது. அவன் மிகுதியும் நேசித்து மனைவியாகவே ஏற்றுக்கொண்ட மாதவியிடத்துக் கூட இம்முனைப்பை இவன் விட்டுவிடவில்லை தலைக்கோல் அரிவை’பட்டம் பெற்று அரசவையிலும் மன்றத்திலும் நாட்டியம் ஆட வேண்டியவள் பல சமயங்களில் கோவலனுடைய விருப்பத் திற்கிணங்க தன் ஆட்டத்தையே நிறுத்திவிட்டாள் என்று அறிகிறோம். எனவே அவனுடைய முனைப்பு எங்கும் பரவியிருந்தது என்பதை அறிய முடிகின்றது. இந்த முனைப்பு கண்ணகியின் எதிரே செல்லும்போது அவளுடைய கற்பின் திண்மை, குறிக்கோள் வாழ்க்கை என்பவற்றின் முன்னே முனை மழுங்கி விடுகிறது. சில ஆண்டுகள் கண்ணகியுடன் குடும்பம் நடத்துகின்ற காலையில், கோவலன் இதனை உணர்ந்திருக்கவேண்டும். ஒருவேளை கண்ணகி அதிகம் பேசுபவளாக இருந்திருந்தால் போராடித் தன் முனைப்புக்கு கோவலன் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பான். ஆனால் வாய் திறந்து அதிகம் பேசாத அப்பெருமாட்டியின் எதிரே கோவலனின் முனைப்பு முனை மழுங்கியதில் வியப்பு