பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 115 ஒன்றுமில்லை. எனவே அவளைச் சந்திப்பதையே அக் கலைஞன் தவிர்த்து விட்டான் என்று தான் நினைக்க வேண்டி யுள்ளது. இல்லாவிட்டால் ஒரே ஊரில் வாழ்ந்து ஒருமுறைகூட தன் இல்லத்திற்குச் செல்லவில்லையென்றால் அதற்கொரு முக்கியமான காரணம் இருத்தல் வேண்டும். மாதவிமாட்டுக் கொண்ட தன்னையிழந்த காதல் காரணமாகவே கோவலன் கண்ணகியை மறந்தான் என்று சொல்லலாமா என்றால் அதுவும் அவ்வளவு சரியாகப்படவில்லை. தன் பழைய வாழ்க்கையை நினைந்து பார்த்து கண்ணகியிடம் கோவலன் கூறும் சொற்கள் மாதவியிடமும் அவன் முழுவதுமாக தன்னை இழந்து காதலித்தான் என்று சொல்லமுடியாது என்பதை நிரூபிப்பன ஆகும். அவன் கூறும் சொற்கள், வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக்கொன் றேற்கு நன்னெறி யுண்டோ (கொலைக் களக் காதை 63-66) என்பவை ஆகும். வறுமொழியாளர் முதலானோர் கூட்டத்தில் அவன் பொழுது போக்கியதற்குக் காரணங்கள் இரண்டுண்டு. வறுமொழியாளர், வம்பப் பரத்தர் முதலானவர்கள் பெருஞ் செல்வனாகிய அவனை, தம்மால் போற்றப்படும் தலைவனாகக் கொண்டு ஒயாது முகஸ்துதி செய்வார்கள், இந்தக் கலைஞனின் முனைப்புக்கு அவர்கள் புகழுரை நல்ல உணவாக அமைந்தது. இரண்டாவது காரணம் அவன் வாழ்வு முழுவதிலும் குறிக்கோள் என்ற ஒன்று இல்லவே இல்லை. அவ்வப்பொழுது எண்ணத்தில் தோன்றும் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இயல்புடையவன். -