பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அ.ச. ஞானசம்பந்தன் உணர்ச்சி வசப்பட்டவன் implisive mar அவன் எனபதை அவன் வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகள் அறிவுறுத்து கின்றன. குறிக்கோள் அற்ற வாழ்க்கை, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆளாதல், என்ற இரண்டும் உடைய ஒருவன், குறிக்கோள் தன்மையையே உருவாகக் கொண்டவளும், உணர்ச்சிகட்கு ஒரு சிறிதும் இடங்கொடாதவளும் ஆகிய கண்ணகியின் முன்பு செல்வதையே தவிர்த்து விட்டான். இத்தனைக் கருத்தை யும் உள்ளடக்கி அடிகள், மணமனை புக்கு மாதவி தன்னோடு அணைவுறு வைகலி னயர்ந்தனன் மயங்கி விடுத லறியா விருப்பின னாயினான் வடுநீங்கு சிறப்பின்தன் மனையக மறந்தென் - (அரங்கேற்று காதை 172-175) என்று கூறுகிறார். மனையகம் மறப்பதற்குக் காரணம் கண்ணகி முகத்தில் விழிக்க அவனுடைய தன் முனைப்பு இடம் தராமையே. இதுவரை கூறிய நீண்ட பகுதி கோவலனைப் பற்றியது என்றாலும் இதன் பின்னணியில் நிற்பவள் கண்ணகி யேயாவாள். தன்னுடைய திடீர் உணர்ச்சிகளுக்கு இரை போடும் வாழ்க்கையை மேற்கொண்டானாயினும் கோவலன் வாழ்க்கையில் அமைதி என்ற ஒன்று இருந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் கண்ணகியைப் பொறுத்த மட்டில் கணவனை உயிருடன் இழந்து வாழ்ந்தாளேனும் அவள் வாழ்க்கையில் அமைதிக்குப் பஞ்சமே இல்லை. கணவனை மீட்டு மறுபடியும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்று அவள் கருதி யிருந்தால் சில்ப்பதிகாரமே நடைபெற்றிருக்காது. அவள் தோழி தேவந்தி சோம குண்டம், சூரியகுண்டம் மூழ்கி காமவேள் கோட்டம் கைதொழுதான் கணவனை மீட்டுப் பெறலாம் என்று புத்திமதிகள் கூறியபிறகு கண்ணகி கூறிய விடை பீடு அன்று' என்ற இரு சொற்களேயாகும். கணவனைப் பிரிந்து வாழ்வது தன் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட மாபெரும் குறை அல்லது இழப்பு என்று அவள் நினைந்ததாகத் தெரியவில்லை.