பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 117 அவளுடைய குறிக்கோள் அதுவாக இருந்திருப்பின் தேவந்தியின் அறிவுரைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பாள். தன் தகுதியால் கணவனை மீட்க வேண்டுமே தவிர தெய்வத்தின் உதவியால் அதனைப் பெறுதல் பீடு அன்று என்று அவள் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. குறிக்கோள் வாழ்க்கை உடையார்க்கு அக்குறிக்கோள் தவிர வேறெதுவும் ஒரு பொருட்டாக எதிரே நிற்பதில்லை. அதனால்தான் காமவேள் கோட்டம் தொழுது கணவனை மீட்டல் தன் குறிக்கோளுக்குப் பீடு செய்யாது என்று நினைக்கிறாள். கணவன் என்ற ஒருவன் இருக்கின்ற வரையில் அவனுக்குத் தேவையானவற்றைச் செய்வது, தேவை ஏற்பட்ட பொழுது சிலம்பு உள கொண்ம் என்று தருவது, மதுரைக்கு எழுக என்றவுடன் எழுவது, ஆகிய அனைத்துமே அக்குறிக் கோள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். கணவனைப் பிரிந்து உறைகின்ற காலத்தில் கண்ணகி வாழ்க்கை நடத்தியவிதம் இதுவாகும். இது மாதிரி ஒரு சூழ்நிலை காரைக்கால் அம்மையாருக்கு ஏற்படுகிறது. பரமதத்தன் கோவலனைப் போன்ற கலைஞன் அல்லன். கடைந்தெடுத்த வணிகன் ஆவான் அவன் முதல், ஆக்கம் என்பவை தவிர அவன் வாழ்க்கையில் வேறு குறிக் கோளே இல்லையென்பதைச் சேக்கிழார் குறிப்பாக உணர்த்து கிறார். அழகே வடிவானவரும் பண்பாட்டின் உறைவிடமாக உள்ளவரும் ஆகிய புனிதவதியாரை மணந்ததால், பரமதத்தன் மகிழ்ச்சி அடைந்தானா என்ற வினாவை எழுப்பி அதற்கு வேறு வகையாக விடை தருகிறார் சேக்கிழார். மகள் கொடையின் மகிழ்சிறக்கும் வரம்புஇல்தனம் - - கொடுத்ததன்பின் நிகர்ப்புஅரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும் தகைப்புஇல் பெருங் காதலினால் தங்கு மனைவளம் பெருக்கி