பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ் எல்லா இடங்களிலும் இத்தெய்வங்கள் மிகவும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவற்றைக் கொண்டு நூலாசிரியர் சமயம் யாது என்ற முடிவிற்கு வருவதும் பொருத்தமாகப் படவில்லை. பாத்திரங்களின் கூற்றாக இல்லாமல் ஆசிரியர் கூற்றாகவே வரும் இடங்களில் அவர் எவ்வாறு இத்தெய்வங்களை அறிமுகப்படுத்துகிறார் என்பதைக் காண்டல் வேண்டும். அதற்குரிய சான்றுகள் இரண்டொன்றைக் காணலாம்.


இந்திர விழவூரெடுத்த காதையில் நான்கு பெருங்கோயில்கள் பேசப்படுகின்றன. அவை வருமாறு:

“பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீல மேனி நெடியோன் கோயிலும்’ (169-172)


தமிழிலக்கியத்தில் அதிகம் பேசப் பெறாத பலராமனுக்கு ஒரு கோயில் இருந்தைச் சிலம்பு பேசுகிறது: செவ்வேள் என்று முருகனையும் நீலமேனி நெடியோன் என்று திருமாலையும் குறிப்பிடும் ஆசிரியர் சிவபெருமான் கோயிலைச் சொல்ல வரும்பொழுது பிறவா யாக்கைப் பெரியோன் என்று கூறுவது சிந்திக்கத் தக்கது. இப்படிப்பட்ட அடை மொழிகள் தந்து பேசுவது ஆசிரியனுடைய அடிமனத்திலுள்ள எண்ண ஓட்டங்களைக் குறிப்பனவோ என்ற ஐயம் தோன்றுகிறது.


இதே போல வஞ்சிக் காண்டத்தில் ஒரு நிகழ்ச்சி பேசப் படுகிறது. அந்த நிகழ்ச்சி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அன்று என்றும் கூறுவதற்கில்லை. சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டு புறப்படுகிறான். எல்லாப் பணிகளையும் முடித்த பிறகு வஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று யாருக்கும் வனங்காத தன் முடியைத் தாழ்த்தி வணங்கிவிட்டு