பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அ.ச. ஞானசம்பந்தன் மிகைப் புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினாள். (காரைக்கால் 13) இப்பாடலின் முதலடி நம் கவனத்திற்குரியது. மனைவியைப் பெற்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் புனிதவதியாரின் தந்தை தனதத்தன் தந்த வரம்புஇல் தனம் - அளவற்ற செல்வம் - கண்டு மகிழ்ந்தான் பரமதத்தன் என்று கூறுகிறார் சேக்கிழார் மூன்றாவது அடியில் நிதிபதி தன் குலமகன் தகைப்புஇல் பெருங் காதலினால் இல்லறம் நடத்தினான் என்கிறார் ஆசிரியர். இந்தக் காதல் யார் மாட்டு? மனைவியிடமா? அதற்கு விடைகூறும் முகமாகவே, மகிழ்சிறக்கும் வரம்புஇல் தனம் கொடுத்தான் என்று பேசுகிறார் ஆசிரியர், அந்த அளவற்ற செல்வத்தின் மேல் காதல் கொண்டான் பரமதத்தன் என்று தேரிகிறது. கலை யுணர்ச்சியால் மனைவியின்மாட்டு முழு அன்பு செலுத்தாமல் ஏனோதானோவென்று குடும்பம் நடத் தினான் கோவலன். கணவன் மனைவி உறவு இருந்ததே தவிர அந்த உறவின் உயிர் நாடியாக அன்பு இருந்ததாகத் தெரியவில்லை. அதேபோல பரமதத்தன், புனிதவதியார் இல்லறம் நடந்தது. இந்தக் கணவன் மனைவி உறவின் அடிப்படையில் அன்பு இருந்த தாகத் தெரியவில்லை. பரமதத்தன் அன்பெல்லாம் வரம்புஇல் தனத்தின் மேலேயே ஆகும். உண்மையான அன்பு உடைய வனாக இருந்திருப்பின், அம்மையாரிடத்து காதல் கொண்டு வாழ்ந்து இருப்பின் அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் தவற்றைச் செய்திருக்க மாட்டான். அவனுக்குக் கையுறையாக கிடைத்தவை இரண்டு மாம்பழங்கள். அவற்றில் ஒன்றைக் கொண்டு வந்து கணவனுக்கு இட்டார் அம்மையார். அதன் சுவையில் மயங்கி,